(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, August 30, 2010

சிறைவாசிகளின் விடுதலைக்கு உதவிடுங்கள்

கோவை முஸ்லிம் குடும்பங்களின் கண்ணீர் மடல்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி பரக்காதுஹு

1990 ஆம் ஆண்டுகளில் இந்துத்துவ பயங்கர அமைப்புகளால் திட்டமிடப்பட்டு அரங்கேற்றப்பட்ட பல்வேறு கலவரங்களால் பாதிப்புக்குள்ளான சமுதாயத்தின் கண்ணியங்காக்க தன்னெழுச்சியாய் புறப்பட்ட நம் சமுதாய இளைஞர்கள் இவ்வாண்டு (2010) வரை தொடர் சிறைவாசம் அனுபவித்து வருகிறார்கள். காவல்துறை நீதித்துறை மற்றும் ஆளும் அரசாங்கத்தின் பாரபட்சமான போக்கினால் தொடர் வதைகளுக்கு ஆளாகிவரும் இளைஞர்களை விடுவிக்கும் பணியிலும் அவர்தம் குடும்பத்தினரைக் காக்கும் பொறுப்பிலும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை தன்னை அர்ப்பணித்து வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்.


இவ்வமைப்பு 2001 ஆம் ஆண்டு ஒருசில சிறைவாசிகளின் இல்லாத்களைக் கொண்டு அரசு பதிவுபெற்ற அமைப்பாக தோற்றுவிக்கப்பட்டது. (பதிவு எண்- 882-2001) இன்றளவும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில சகோதரர்களே இதற்கான களப்பணியை ஆற்றி வருகிறார்கள். இருப்பினும் எண்ணற்ற ஈர நெஞ்சங்களின் குன்றா உதவிகளால்தான் இவ்வமைப்பின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன.


பெருஞ்செல்வந்தர்கள் முதற்கொண்டு சாதாரண கூலித் தொழிலாளிகள் வரை இப்பணிகளுக்கு தம்மால் இயன்ற ஒத்தாசைகளை வழங்கி வருகிறார்கள். ஒப்பற்ற அவர்தம் உதவி ஒத்தாசைகளால்தான் ஏறக்குறைய 200க்கும் மேற்பட்ட வழக்குகளில் இருந்து வதைபட்டுவந்த சிறைச் சகோதரர்கள் விடுதலையாகி உள்ளார்கள்.

இப்பேருதவியை தொடர்ந்து அளித்துக்கொண்டுள்ள நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை என்றென்றும் நவின்று கொண்டுள்ளோம். அவர்களுக்காக உளப்பூர்வமான துஆக்களையும் செய்து கொண்டுள்ளோம்.

நிறைவேறாமல் தொடரும் இப்பணிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தேயாகவேண்டும் என்பதற்காக மீண்டும் உங்கள் தலைவாசல் தேடி வந்துள்ளோம். அதிகபட்சமாய் 15 ஆண்டுகளுக்கும் மேலாய் சிறைகளில் வாடிவதங்கும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்றால் அவர்களுடைய வழக்குகளை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுபோய் மேல்முறையீடு செய்து வழக்காட வேண்டும்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டு 24 சகோதரர்கள் விடுதலையாகி உள்ளனர் என்பதை உங்களுடைய கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
இவ்வழக்கில் 18 சகோதரர்களின் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அவர்களுக்காக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாக வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் மேல் முறையீடு தாமதமாகிக் கொண்டே செல்கின்றது. காலம் அதிகரிக்கும்போது கவலைகளும் துயரங்களும் கூடுதலாகின்றன.

கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாகதமிழக சிறைகளில் வாடிக்கொண்டுள்ள நமது முஸ்லிம் சகோதரர்களின் விடுதலைக்காக இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் உங்களுடைய ஜகாத் மற்றும் ஸதக்கா போன்றவற்றை கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கிட்டத்தட்ட 75 லட்சத்திற்கும் மேலாக நிதி தேவைப்படுகின்றது என்பதையும் உங்கள்முன் வைக்கிறோம். ஆகையால், புனிதமிக்க ரமழானில் மாநபி காட்டித்தந்த மார்க்கம் வலியுறுத்துகின்ற அடிமையை விடுவித்தல் என்னும் மகத்தான் மார்க்கப் பணிக்காக உங்களுடைய பொருளாதாரத்தை அள்ளித் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.


இதனை வல்ல அல்லாஹ் பன்மடங்காக உங்களுக்கு மறுமையில் திருப்பியளிப்பான். (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாமின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல்குர்ஆன் 9-60)

இறைவேதம் குர்ஆனும் மாநபி மணிமொழிகளும் வலியுறுத்துகின்ற இறைவழிச் செலவான 'அடிமைகளை விடுவித்தல்' என்னும் உயர்பணிக்காக தங்களுடைய வரையறாது வாரி வழங்குமாறு சிறுபான்மை உதவி அறக்கட்டளை பணிவுடன் கேட்டு நிற்கின்றது.


உங்களுடைய உதவிகளை கீழுள்ள வங்கி கணக்கிற்கு அன்புகூர்ந்து அனுப்பித்தாருங்கள்.


CHARITABLE TRUST OF MINORITIES
96 VINCENT ROAD
FORT, COIMBATORE -641001
TAMIL NADU
INDIA
PHONE--0422 2307673
MOB --9786093544


BANK- ICICI : A/C SB - 605301208490
MILL ROAD BR
COIMBATORE-641001


ABUL HASSAN SATHALI(ADIRAI)
9842653248
NASEER(KOVAI)
9787450725
SALEEM BATHUSHA
9786675408

இப்படிக்கு

சிறுபான்மை உதவி அறக்கட்டளை

www.ctmkovai.com

Sunday, August 29, 2010

சஹாபாக்களின் வாழ்வினில் படிப்பினை ...2

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

அல்கமா இப்னு கைஸ்(ரஹ்) அறிவித்தார்;

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக்கொள்ள முயலும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்?' என்று கூறினார்கள். இச்செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, 'உம்மு யஅகூப்' எனப்படும். ஒரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் வந்து, 'இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக்கூடாது?' என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், '(குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன்.

நீங்கள் குறிப்பிட்டதை நான் அதில் காணவில்லையே!' என்று கேட்டதற்கு அவர்கள்,
'நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். 'இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவர் உங்களைத் தடுப்பதைவிட்டும் நீங்கள் விலகி இருங்கள்' எனும் (திருக்குர்ஆன் 59:7 வது) வசனத்தை நீ ஓதவில்லையா?' என்று கேட்டார்கள்.

அந்தப் பெண், 'ஆம் (ஒதினேன்)' என்று பதிலளித்தார். அப்துல்லாஹ்(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் (மேலே குறிப்பிட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள்' என்று கூறினார்கள். அந்தப் பெண்மணி, 'உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக கருதுகிறேன்' என்று கூறினார். அப்துல்லாஹ்(ரலி), 'சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்!' என்று கூறினார்கள்.

எனவே, அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன்' என்று கூறினார்கள். நூல்;புஹாரி எண் 4886

அன்பானவர்களே! நபித் தோழர்களில் மிகச்சிறந்தவர்களில் ஒருவரான இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள், பச்சை குத்துவது உள்ளிட்ட அல்லாஹ் வடிவமைத்ததை மாற்றுபவர்களை சபிக்கிறார்கள். இச்செய்தி ஒரு பெண்மணிக்கு எட்டுகிறது. சரி! சொன்னவர் சாமான்யர் அல்ல. ஒரு உயர்வான நபித்தோழர்.

எனவே அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே நம்பிவிடவில்லை. மாறாக, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் வந்து உங்களின் கூற்றுக்கு என்ன ஆதாரம்..? என்கிறார். இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப் பட்டுள்ளவர்களை நான் சபிக்கக் கூடாதா என்கிறார்கள். அப்போதும் அப்பெண்மணி விடவில்லை.

குர்ஆணை முழுமையாக ஒதியுள்ளேன் எனவே நீங்கள் கூறுவது போல இல்லையே என்கிறார். இந்த அளவுக்கு சஹாபிப் பெண்கள் தெளிவாக இருந்துள்ளார்கள். குர்ஆணோடு முழு தொடர்போடு இருந்துள்ளார்கள். ஒருவர் கூறும் சட்டம் குர்ஆனில் இல்லை என்று அடித்து சொல்லும் அளவுக்கு குர்ஆணை முழுமையாக மனனம் செய்துள்ளார்கள். ஆனால் இன்று நம்முடைய பெண்கள் மட்டுமல்ல; ஆண்களில் கூட பெரும்பாலோருக்கு குர்ஆண் ஓத தெரிவதில்லை.

காரணம் போடுபோக்குத்தான். எதுவா இருந்தாலும் ஆலிம்ஷாக்களிடம் கேட்டுக்கொள்வோம். அவர்கள் சொல்வதை அப்படியே அமுல்படுத்துவோம் என்ற மெத்தனப்போக்குத்தானே இத்தனை குழப்பங்களுக்கு வழிவகுத்தது..? இது ஒருபுறமிருக்க, இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களிடம் அப்பெண்மணி, 'எல்லாம் சரிதான் ஆனா ஒங்க வீட்டுல ஒங்க துணைவியார் செய்கிறாகளாமே' என இழுக்க, சட்டென இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள் என் வீட்டில் போய் பாருங்கள் என்கிறார்கள்.

அதோடு இறுதியாக, என் மனைவி மட்டும் அப்படி செய்பவளாக இருந்தால் அவளோடு நான் சேர்ந்து வாழமாட்டேன் என்கிறார்கள் இப்னு மஸ்வூத்[ரலி] அவர்கள். இன்றைக்கு வெளியிலே மார்க்க சட்டம் பேசக்கூடிய நம்மில் பலரின் வீட்டில் நாம் பேசக்கூடிய சட்டங்கள் பெரும்பாலும் நமது குடும்பத்தாரால் அமுல்படுத்தப்படுவதில்லை. ஆனாலும் நாம் அதை கண்டுகொள்வதில்லை. அவ்வளவு ஏன்..? பல நேரங்களில் நாமே பல அமல்களை கோட்டை விடக்கூடியவர்களாக இருக்கிறோம். 'ஊருக்குத்தான் உபதேசம்' என்பதற்கு ஏற்ப நமது செயல்பாடுகள் உள்ளன.

ஆனால் அருமை சஹாபா பெருமக்கள் சொல்லிலும் செயலிலும் தூய்மையாளர்களாக திகழ்ந்ததோடு, தந்து குடும்பத்தார் விசயத்திலும் அத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்னு மஸ்வூத்[ரலி] அவர்களின் இந்த செய்தி உணர்த்துகிறது.

எல்லாம் வல்ல அல்லாஹ் மார்க்கத்தை சொல்லில் மட்டுமல்ல; செயலிலும் கடைபிடிக்க அருள்புரிவானாக!

கேள்வி: ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா..?

அன்புச் சகோதரர்களே,


"இக்குர்ஆன் உலக மாந்தர் அனைவருக்கும் ஓர் நேர்வழிகாட்டியே அன்றி வேறில்லை" எனத் திருமறை குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வகையில் திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவும் சூழலில், அது எங்களுக்கும் உரியது தான் என்ற கருத்து தொனிக்க உரிமையுடன் அதில் எழுந்த சந்தேகத்தைக் குறித்து இங்கு கேள்வி எழுப்பிய தங்களின் ஆர்வத்திற்கு நன்றி! நாம் நேர்வழியில் என்றென்றும் நிலைத்திருக்க உதவி இறைவன் புரிவானாக!



திருக்குர்ஆன் நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு 23 வருட காலமாக அருளப்பட்டதாக இருக்க ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் இறங்கியதாக முஸ்லிம்கள் கருதுவதில் தங்களுக்கு எழுந்த சந்தேகம் நியாயமானதே!


நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் 40 ஆவது வயதிலிருந்து அவர்கள் மரணித்த அவர்களின் 63 ஆவது வயது வரை சுமார் 23 வருடங்களாக சிறுகச் சிறுக காலச் சூழல்களுக்குத் தக்கவாறு திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது உண்மை தான்.


அதே போன்று சகோதரர் சம்பத் அவர்களுக்கு சந்தேகம் வந்த,


"தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! 'இதை' பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் " (அல்குர்ஆன் 044:002,003)

என்ற திருக்குர்ஆன் வசனம் கூறுவதும் உண்மையே. இவ்வசனத்திற்கு ரமலான் மாதத்தின் பாக்கியமிக்க அந்த லைலத்துல் கத்ர் இரவில், தற்போதைய முழு புத்தக வடிவிலான குர்ஆன் முழுமையும் அவ்வோர் இரவிலேயே அருளப்பட்டதாக அர்த்தம் கொண்டதாலேயே சகோதரருக்கு இச்சந்தேகம் வந்துள்ளது.

ஆனால் இவ்வசனத்தின் பொருள் அவ்வாறன்று. இங்கு குறிப்பிடப்படும் 'இதை' என்ற 'திருக்குர்ஆன்' வார்த்தை சுட்டுவது முழுக்குர்ஆனை இல்லை. அவ்விரவில் முதன்முதலாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனின் சில வசனங்களையே இவ்வசனம் சுட்டுகின்றது.

எவ்வாறு முழுக்குர்ஆனை திருக்குர்ஆன் என்கின்றோமோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களையும் குர்ஆன் என்றே திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்.


இதற்குச் சில உதாரணங்களை திருக்குர்ஆனிலிருந்தே காணலாம்:


குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்விகள் கேட்டால் ... (அல்குர்ஆன் 005:106)

இந்தக் குர்ஆன் எனக்கு வஹீயாக - அருளப்பட்டது ... (அல்குர்ஆன் 006:019)

இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை... (அல்குர்ஆன் 010:037)

மேற்கண்ட இந்த வசனங்களெல்லாம் அருளப்பட்ட நேரத்தில் மொத்தக் குர்ஆனும் முழுமையாக அருளப்பட்டிருக்கவில்லை. ஆயினும் மேற்கண்ட வசனங்களைப் போல் குர்ஆனின் பல இடங்களில், அதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டிந்த வசனங்களை குர்ஆன் என்றே இறைவன் குறிப்பிட்டுகிறான் . இதிலிருந்து திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் குர்ஆன் என்ற பொருளையே உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆன் (ரமளான் மாதத்தின்) "பாக்கியமிக்க இரவில் அருளப்பட்டதாக" குறிப்பிடும் அந்த வசனத்தை, "(ரமளான் மாதத்தின்)பாக்கியமிக்க இரவில் (திருக்குர்ஆன்) வசனம் அருளத்துவங்கியதாகவே" பொருள் கொள்ள வேண்டும்.


திண்ணமாக, நாம் இ(ந்த மறையை அருளுவ)தை மாண்புறு இரவொன்றில் அருளி(த் தொடங்கலா)னோம். (அல்குர்ஆன் 097:001)

எனவே குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்பது, குர்ஆன் 23 ஆண்டு காலமாகச் சிறுகச் சிறுக அருளப்பெற்றது என்பதற்கு முரணானக் கருத்து இல்லை. நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40 ஆவது வயதில் ரமலான் மாதத்தில், குர்ஆனின் 'அலக்' என்ற 96வது அத்தியாயத்தின் முதல் 5 வசனங்கள் முதன்முதலாக அருளப்பட்டது. இவ்வாறு ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்படத் துவங்கியதையே இறைவன், "பாக்கியமிக்க (ரமலான் மாத)இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக்" குறிப்பிடுகின்றான். ஆரம்பத்தில் ஐந்து வசனங்கள் மட்டுமே அருளப் பட்டிருந்த சூழலில், வசனங்களும் 'குர்ஆனையே குறித்து நிற்பதால் ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கியது என்பதில் எவ்வித முரணுக்கும் இடமில்லை!


(இறைவனே மிக்க அறிந்தவன்)
நன்றி :http://www.satyamargam.com/635

Monday, August 23, 2010

தமிழக இஸ்லாமிய இயக்க தலைவர்களுக்கு, ஒரு முஸ்லிமின் கேள்விகள்?

என்ன இவர்களுடைய நோக்கம்? இஸ்லாத்தை தூய வழியில் போதிகின்ற பேர்வளிகள் என்று இவர்கள் போடும் சண்டைகள் என்று ஓயும்? மார்கத்திற்கு கூட்டத்தை அழைப்பதை விட மாநாடுகளுக்கும் தங்கள் சொந்த பயான்ன்களுக்கும் கூட்டத்தை சேர்ப்பதில் மும்முரமாக செயல் படும் இவர்களுது நிய்யத்து தான் என்ன? அரசியல் வாதிகளிடம் தங்களுக்கு உண்டான மக்கள் செல்வாக்குகளை காட்டி சீட் பேரமோ.

பொட்டி பேரமோ அல்லது "அம்மா" "வின்" டிவி பேரமோ நடத்துவதுதான் இவர்களது நோக்கமா? தௌஹீது என்ற பெயரில் இவர்களது தொண்டுகள் அனைத்தும் வியாபாரமா? இல்ல நீயா நானா என்ற அஹங்கார சண்டையா? எதற்காக இத்தனை சண்டை பேச்சுக்கள்? 25வருடங்கள் முன்பு தௌஹீது என்ற உன்னத கடவுள் கொள்கையை மறந்த தமிழக முஸ்லிம்களுக்கு எத்தி வைக்க வேண்டிய மிக பெரிய பொறுப்புடன் ஆரம்பம் செய்யப்பட்ட நோக்கத்தில் தான் இன்றும் அவர்கள் இருகின்றார்களா? அவர்களுடைய மேடை பேசுகளில் மௌலீதையும், தர்காகளையும், மற்ற பிற பிட்'அத் களையும் ஒழிப்பது பற்றிய பிரசாரங்கள் குறைந்து மற்ற இயக்கத்தவர்களின் குறைகளை மாறி மாறி ஆராய்வதன் நோக்கம் என்ன?

எங்கே இஸ்லாமிய இளைஞர்கள் ஒரு அணியின் கீழ் ஒன்று பட்டால் இஸ்லாமிய எதிரிகளான RSS , அமெரிக்கா, இஸ்ரேல் போன்றவர்கள் தோற்துவிட கூடும் என்ற பயத்தால் முஸ்லிம் உம்மாஹ் ஒன்று பட கூடாது என்ற நோக்கத்தில் செய்யும் சதிகளுக்கு இவர்கள் ஆளாகின்றார்களா? அல்லது அவர்களுடன் இவர்களும் கூட்டு வைத்து கொண்டு இஸ்லாமியர்களை ஏமாற்றுகிறார்களா? உங்களுடைய நோக்கங்கள் தான் என்ன? அல்லாஹ்வின் கயிற்றை ஒற்றுமையுடன் பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள் என்று அல்லாஹ் சொல்லும் வார்த்தைக்கு உங்கள் மரியாதை தான் என்ன?


தர்கா வாதிகளுடனும், தரிக்கா வாதிகளுடனும், ஷியா, காதியானி, பை-அத் கோஷ்டிகளுடனும் உங்களை கை குலுக்கி ஒற்றுமை பட கேக்க வில்லை.. அவர்கள் திருத்தப்பட வேண்டியவர்கள்.. திருந்தாவிட்டால் தண்டிக்க பட வேண்டியவர்கள்.. ஆனால் மற்றவர்கள் யாரும்மையா உங்களுக்கு? உன்னை போன்று ஷிர்க் மற்றும் பித்தத் களை குரான் மற்றும் சுன்னாஹ் வழி மூலம் எதிர்க்கும் அல்லாஹ்வின் கயிற்றை பிரச்சாரிக்கும் உன் சகோதரன் தானே..

பல கொள்கையை உடைய அரசியல் கட்ச்சிகளே அரசியல் நோகதுக்காகவும் தங்கள் சொந்த லாபதுகாகவும் குறைந்த பட்ச செயல் திட்டம் தீற்றி ஒற்றுமையாக ஐந்து வருடம் ஆட்சி நடத்தும் போது தன் வாழ்வியல் நெறியாக வணக்கம் முதல் குடும்பம் வரை ஒற்றுமையை வழியுறுத்தும் இஸ்லாத்தை பின்பற்றுபவர்கள் என்று கூறிகொள்ளும் நம்மவர்களுக்கு குரானை ஒற்றுமையாக பற்றி பிடித்து கொள்வது எப்படி என்று தெரிய வில்லையா? கருத்து வேற்பாடுகள் தான் நீங்க பிரிந்து கிடப்பதன் உண்மை காரணமா? அல்லது பிரிந்து கிடந்தால் தான் அரசியல் செய்ய முடியும் என்பது உங்கள் நோக்கமா? மார்க்கத்தை நிலை நிறுத்து வது எப்படி என்று உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நபிகளாரின் சுன்னாஹ் உங்களுக்கு கற்று தர தவறிவிட்டதா?


தெரிந்தோ தெரியாமலோ, மார்க்கம் அனுமதித்ததோ அனுமதிகவில்லையோ அரசியல் காட்சிகளுக்கு ஆதரவு என்ற விசயத்தில் அனைவரும் ஒற்றுமையாக இருகிறீர்கள்.. ஜனநாயகம் நவீன கால இணை வைப்பு என்று பிரச்சாரம் செய்த பேர்(?)ஆசிரியர்கள் இன்று ஜன நாயக முறையில் தேர்தலில் போடி இடுகிறீர்கள்.. எங்களுக்கு அரசியல் வேணாம்(?) என்றும் தௌஹீது மட்டும்தான் (?) எங்கள் பணி என்று இயக்கத்தை பிரித்த அண்ணன்கள் இன்று மாறி மாறி ஆதரவு என்ற பெயரில் அரசியல் பண்ணுகிறார்கள்..

நாங்கள் கிலாபாத் ஆட்சி முறையை கொண்டு வருவோம் என்று இஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத ஈரானிய இஸ்லாமிய புரட்சியை உதரணமாக எடுத்து செயல் பட்டு வந்த இயக்கங்களும் இன்று சுதந்திர தினத்தை டெல்லி இல் நடந்ததை விட மிக சிறப்பாக கேரளத்தில் நடத்தி அரசியல் கட்சி திறந்து தேர்தலில் போட்டி இடவும் செய்கிறார்கள்..


ஒவ்வொருவரும் எதாவது ஒரு விசயத்தில் ஜன நாயகத்தை ஆதரித்து கொண்டிருகிறார்கள்.. ஜன நாயகத்தை ஆதரிக்கும் நீங்கள் அதை ஆதரிக்கும் முறையிலும் ஒன்று பட்டாள் எவ்வளவு நன்றாக இருக்கும்.. இந்திய யூனியன் முஸ்லிம் லீகும் தேசிய முஸ்லிம் லீகும் DMK மற்றும் ADMK வை மாறி மாறி ஆதரித்து தான் அழிந்தது மட்டுமில்லாமல் தமிழக முஸ்லிம்களை இட ஒதுக்கீடு பிச்சைக்காரர்களாக ஆகிய கதைகள் நீங்கள் சொல்லி தான்யா எங்களுக்கு தெரியும்..

இன்னைக்கு அப்துஸ்ஸமத் மற்றும் அப்துல்லதீப் வழியில் மிச்சம் மீதி இருக்கும் எங்கள் மானத்தையும் உரிமையையும் அழித்து செல்ல ஜைனுலாப்டீனும் ஜவாஹிருல்லாஹ்வும் வந்திருகிறீர்களா? நீங்கள் இருவரும் பெருமையுடன் மார்தட்டி கொள்ளும் 3.5 % இட ஒதுகீடினால் பயனடைந்த முஸ்லிம்களை பட்டியலிட முடியுமா?


உங்களை தயவு கூர்ந்து கேட்டு கொள்கிறோம்.. எப்ப எந்த RSS காரன் வந்து வீட்டு கதவ தட்டுவான் என்ற பயத்தோடும் நம் பிள்ளைகளாவது படித்து முன்னேறிவிட கூடாத என்ற ஏகதொடும் பாலைவான பூமியில் கஷ்டப்படும் எமக்கும் யாம் பிறந்த எம் சொந்த பூமியில் எதாவது வேலையோ தொழிலோ செய்யும் வாய்ப்பு கிடைக்காத என்ற தேடலோடும் வாழும் இந்த தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளை நீங்கள் பணம் மற்றும் பதவிகளை சம்பாதிக்கும் மூலதனமாக ஆக்கி விடாதீர்கள்..

எங்கள் இரத்தங்களையும் உழைப்புகளை பொருளாக அளித்து உங்கள் இயக்கங்களை வளர்த்து இருக்கிறோம். எங்கள் உணர்ச்சிகள் எம்முடைய சமுதாயம் அழிந்து விட கூடாதென்பதில் இருக்கின்றது.. அதை கேலி கூத்தாக்கி விடாதிர்கள்.. அம்மாவோ அய்யாவோ இந்த சமுதாயத்துக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்.. அவர்களால் முடிவது எல்லாம் ஆட்சியை தக்கவைத்து கொள்ளவோ அல்லது திரும்ப மீளவோ உங்களை மாறி இயக்கங்களுக்கு பொட்டி பொட்டியாக பணம் தள்ளுவது மட்டும்தான்.. அந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொண்டு பெட்டியை முஸ்லிம்களின் சவ பொட்டியாக ஆக்கிவிடாதீர்கள்..


பத்து சதவிகித இட ஒதுக்கீடு எல்லா இயக்கத்தவர்களின் ஒரே நிலைப்பாடு.. அதை குறைந்தபட்ச செயல் திட்டமாக கொண்டு பிறை, ஜகாத், அரசியல், பண பங்கீடு, இஸ்லாமிய ஆட்சி இப்படி ஏதாவது ஒரு விசயத்தில் சண்டை போட்டு கொண்டு சிதறி கிடக்கும் இயக்கங்களே சிந்தித்து செயல் படுங்கள்.. இந்த ஒரு சட்டமன்ற தேர்தலை முஸ்லிம்களின் சக்த்தியை இந்த இந்திய அரசாங்கத்திற்கு புரிய வைக்க கூடிய கடைசி வாய்ப்பாக பயன் படுத்துங்கள்..

தவறினால் தக்லீது செய்யும் முட்டாள் இளைஞர்களை தவிர அறிவு கொண்டு சிந்திக்கும் எந்த ஒரு இஸ்லாமியனும் உங்களை ஆதரிக்க மாட்டான்.. ஒன்று பட்டால் மட்டுமே முஸ்லிம்களின் பல தேவைகளை உங்களால் தீர்க்க முடியும்.. அரசியல் ரீதியிலான அந்த மாற்றம் இஸ்லாமிய இயக்கங்களுக்கான ஒரு கூட்டமைப்பில் மட்டுமே உள்ளது.. அக்கூட்டமைப்பு இல்லாத வரை மாறி மாறி ஆதரவு கொடுத்துகொண்டே இருக்க வேண்டியதுதான்.. கரசேவையை ஆதரிப்பதை ஜெ நிருத்தபோவதுமில்லை தேவை பட்டாள் முஸ்லிம்களை தொல்லை கொடுத்துகொண்டிருபதை கலைஞரும் நிருத்தபோவதில்லை.. நமக்கான வாழ்வு யாரை ஆதரிகின்றோம் என்பதில் இல்லை.. யார் ஆட்சிக்கு வந்தாலும் நம் தயவு தேவை பட வேண்டும்.காயிதமிள்ளத் உருவாகியதை போல.. இன்ஷால்லாஹ்

நன்றி :fewormore.blogspot.com

முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்

இஸ்லாமியர்கள் அனைவரும் ஒரே குர்ஆனை ஏற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களிடையே பல பிரிவுகளையும் - பல வித்தியாசமான கொள்கைகளையும் கொண்டிருப்பது ஏன்?.

ஜாகிர் நாய்க் >பதில்:
1. முஸ்லிம்கள் ஒன்று பட வேண்டும்:

முஸ்லிம்கள் தங்களுக்கிடையே பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. இதில் வருத்தப்படக் கூடிய செய்தி என்னவெனில் பிரிவு என்பது இஸ்லாத்தில் சொல்லப்படாத ஒன்று. இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிவுகளின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்பதுதான் இஸ்லாம் கற்றுத் தரும் பாடம்.

'நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்: நீ;ங்கள் பிரிந்தும் விடாதீர்கள்' என்று அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல இம்ரானின் 103 வது வசனம் கூறுகிறது.

மேற்கண்ட குர்ஆனின் வசனத்தில் சொல்லப்படும் அல்லாஹ்வின் கயிறு எது தெரியுமா?. அருள்மறை குர்ஆன்தான். அருள்மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பற்றிப் பிடிக்க வேண்டும். இந்த வசனத்தில் இரண்டு கருத்துக்கள் தொணிக்கின்றன. அருள் மறை குர்ஆன் என்னும் அல்லாஹ்வின் கயிற்றை இஸ்லாமியர்கள் அனைவரும் பற்றிப்பிடிப்பதுடன் - இஸ்லாமியர்கள் தங்களுக்கிடையே பிரிந்துத் போகக் கூடாது என்கிற இரண்டு கருத்துக்களை மேற்படி வசனம் வலியுறுத்துகிறது.

'அல்லாஹ்வுக்கு கீழ் படியுங்கள். இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.' என்று அருள்மறை குர்ஆனின் நான்காவது அத்தியாயம் ஸுரத்துல் நிஷாவின் 59வது வசனம் கூறுகின்றது. மேற்படி வசனங்களிலிருந்து இஸ்லாமியர்கள் பெறும் தெளிவு என்னவெனில் - அருள்மறை குர்ஆனையும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையும் பின்பற்ற வேண்டும் என்பதேயாகும்.

2. இஸ்லாமிய மார்க்கம் பிரிவினைகள் உண்டாக்குவதை தடை செய்துள்ளது:
'நிச்சயமாக எவர்கள் தங்களளுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவினராக பிரிந்து விட்டனரோ அவர்களுடன்(நபியே!) உமக்கு எவ்வித சம்பந்தமுமில்லை. அவர்களுடைய விஷயமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகள் பற்றி முடிவில் அவனே அவர்களுக்கு அறிவிப்பான்.' என அருள்மறை குர்ஆனின் ஆறாவது அத்தியாயம் ஸுரத்துல் அன்ஆம் - ன் 159வது வசனம் கூறுகிறது. மேற்படி இறை வசனத்திலிருந்து நமக்கு தெரிவிக்கப்படும் செய்தி என்னவெனில் எவர் இஸ்லாமிய மார்க்கத்தை பல பிரிவுகளாக பிரித்து பல வகுப்பினராக பிரிந்து விட்டனரோ - அவர்களைவிட்டு உண்மையான இஸ்லாமியர்கள் விலகிவிட வேண்டும் என்பதுதான்.

ஆனால், ஒரு இஸ்லாமியனைப் பார்த்து, 'நீ யார்?. என்று கேள்வி எழுப்பப்பட்டால் அவரிடமிருந்து வரக்கூடிய பொதுவான பதில் 'நான் ஒரு ஸுன்னி' என்பதாகவோ அல்லது 'நான் ஒரு ஷியா' என்பதாகவோத்தான் இருக்கிறது. இன்னும் சிலர் தங்களை, 'ஷாஃபிஈ' என்றும், 'ஹனஃபிஈ' என்றும் 'ஹம்பலி' என்றும் 'மாலிக்கி' என்றும் அழைத்துக் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'நான் ஒரு தேவ்பந்திஈ' என்றும் 'நான் ஒரு பெரல்விஈ' என்றும் தங்களை அழைத்துக் கொள்கின்றனர்.

3. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு உண்மையான இஸ்லாமியராக இருந்தார்கள்:
மேற்கண்டவாறு தங்களை அழைத்துக் கொள்ளும் இஸ்லாமியர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் எந்த பிரிவைச் சார்ந்தவர்கள் - அதாவது அவர்கள் 'ஷாஃபியா' அல்லது 'ஹனஃபியா' அல்லது 'ஹம்பலியா' அல்லது 'மாலிக்கியா?' என்று கேட்டுப் பாருங்கள். இல்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு முன்புள்ள அல்லாஹ்வின் தூதர்களைப் போன்று ஒரு உண்மையான முஸ்லிம் என்பது மட்டுமே அவர்களது பதிலாக இருக்கும்.

அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 54வது வசனம் நபி ஈஸா (அலை) அவர்கள் ஓர் இஸ்லாமியர் என்பதை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஆல - இம்ரானின் 67வது வசனம் நபி இப்றாஹிம் (அலை) அவர்கள் ஓர் யூதரோ அல்லது கிறிஸ்துவரோ அல்ல. அவர் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட ஓர் முஸ்லிம் என்பதை சுட்டிக் காட்டுகின்றது.

4. உங்களை நீ;ங்கள் முஸ்லிம்கள் என்று அடையாளம் காட்டுங்கள் என அருள்மறை குர்ஆன் வலியுறுத்துகிறது:
எவராவது இஸ்லாமியர்களை நீங்கள் யார் என்று கேட்டால் - இஸ்லாமியர்கள் தாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தைச் சார்ந்தவர் என்று சொல்ல வேண்டுமேத் தவிர தாங்கள் ஓர் ஷாஃபிஈ என்றோ அல்லது தாங்கள் ஓர் ஹனஃபி என்றோ சொல்லக் கூடாது.
அருள்மறை குர்ஆனின் நாற்பத்து ஒன்றாவது அத்தியாயம் ஸுரத்துல் ஹாமீம் ஸஜ்தாவின் 33வது வசனம் கீழ்க்கண்டவாறு கூறுகின்றது.

'எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்களைச் செய்து, 'நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரை விட சொல்லால் அழகியவர் யார்?.(இருக்கின்றார்?)

வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் - நான் ஒரு முஸ்லிம் - என்று சொல்லுங்கள் என்பதாகும்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி ( ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் தபால் மூலமாக இஸ்லாத்திற்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவ்வாறு அழைப்பு விடுக்கும் போதெல்லாம் அருள்மறை குர்ஆனின் மூன்றாவது அத்தியாயம் 64 வது வசனத்தின் கடைசி வரிகளாக அமைந்திருக்கும் 'நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்' என்கிற வசனத்தை குறிப்பிட்டு தபால்களை அனுப்பி வைப்பார்கள்.

5. இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்களுக்கு கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும்.
மரியாதைக்குரிய மார்க்க அறிஞர்களான இமாம் ஷாஃபி (ரஹ்), இமாம் அபூ ஹனீஃபா (ரஹ்), இமாம் ஹம்பல் (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோர் உட்பட இஸ்லாத்தின் மிகச் சிறந்த மார்க்க அறிஞர்கள் அனைவருக்கும் நாம் கண்டிப்பாக மதிப்பளிக்க வேண்டும். இஸ்லாத்தைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்து இஸ்லாத்திற்கு தந்த பல நல்ல செய்திகளுக்காக அல்லாஹ் அவர்களுக்கு மறுமையில் நற்கூலியை வழங்கட்டும்.

இஸ்லாமியர்கள் இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ அல்லது இமாம் ஹனஃபி (ரஹ்) அவர்கள் ஆய்வு செய்து வெளியிட்ட கருத்துக்களையோ - வெளியிடப்பட்ட கருத்துக்கள் குர்ஆன் - ஹதீஸுக்கு மாற்றமில்லாத பட்சத்தில் - எடுத்து செயல் படுத்துவதை எவரும் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் 'நீ யார்?' என்று இஸ்லாமியரை நோக்கி கேட்கப்படும் கேள்விக்கு 'நான் ஒரு முஸ்லிம்' என்பதுதான் பதிலாக இருக்க வேண்டும்.

1. ஒரு சிலர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்த ' எனது சமுதாயம் 73 பிரிவினராக பிரிவர்' (மேற்படி செய்தி அபூதாவூத் என்னும் ஹதீஸ்(செய்தி) புத்தகத்தின் 4579வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது) என்கிற செய்தியை தங்களது பிரிவினை வாதத்திற்கு ஆதாரமாகக் காட்டி வாதிடுவர்.

மேற்படி செய்தியை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் - இஸ்லாமிய சமுதாயம் 73 பிரிவாக பிரியும் என்று முன்னறிவிப்பு செய்தார்களேத் தவிர, அவர்கள் அறிவித்த நோக்கம் இஸ்லாமிய சமுதாயம் தங்களுக்குள்ளேயே பல பிரிவுகளாக பிரிய வேண்டும் என்பதற்காக அல்ல. அருள்மறை குர்ஆன் இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என்று இஸ்லாமியர்களுக்கு கட்டளை இடுகின்றது. அருள்மறை குர்ஆன் கட்டளையின்படி - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைப்படி யார் இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்றுக் கொள்ளவில்லையோ - அவர்கள்தான் உண்மையான இஸ்லாமிய வழியில் நடப்பவர்கள்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் - என்னுடைய உம்மத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அதில் ஓரேயொரு கூட்டத்தைத் தவிர மற்ற அனைத்து பிரிவினரும் நரகத்துக்குச் செல்வார்கள். மேற்படி அறிவிப்பை கேட்ட அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்கள் கேட்டனர் சொர்க்கத்துக்கு செல்லும் அந்த கூட்டம் எது?. என்று. அதற்கு அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்: அந்த கூட்டம் நானும் எனது அன்புத் தோழர்களும் உள்ளடங்கிய கூட்டம் என்று. ( மேற்படி செய்தி திர்மிதி என்ற செய்திப் புத்தகத்தின் 171வது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. )

'அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள். அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்படுங்கள்' என்று அருள்மறை குர்ஆன் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறது. ஒரு உண்மையான முஸ்லிம் அருள்மறை குர்ஆனையும ; - அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையையும்தான் பின்பற்ற வேண்டும். அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் மாற்றமில்லாத பட்சத்தில் எந்த மார்க்க அறிஞர்களின் கருத்துக்களையும் ஒரு உண்மையான முஸ்லிம் ஏற்றுக் கொள்ளலாம்.

ஒரு மார்க்க அறிஞரின் கருத்து - அருள்மறை குர்ஆனுக்கும், அண்ணல் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கும் முரண்படுமாயின் அந்த கருத்துக்கு ஒரு உண்மையான முஸ்லிம் மதிப்பளிக்க வேண்டிய அவசியமில்லை. மேற்படி மார்க்க அறிஞர் எவ்வளவு கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் சரியே.

இஸ்லாமியர்கள் அனைவரும் அருள்மறை குர்ஆனை - கற்றறிந்து - அண்ணல் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த வழிமுறையை சரிவர பின்பற்றுவோம் எனில் இறை நாட்டத்தில் நமக்கிடையே இருக்கும் இந்த பிரிவினை என்ற வேறுபாடு நம்மிடமிருந்து மறையும். நமக்குள்ளே பிரிவினையற்ற சிறந்த ஒற்றுமையும் உருவாகும்.

Sunday, August 22, 2010

குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுங்கள்..!!

பிரசவத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம். அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும் என்பது.

பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.

இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது.


சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும். அதைத் தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும்; தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும்.


மேலும், தாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கு மார்பகத்தின் அளவுக்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தம் உண்டா? என்ற சந்தேகமும் ஏற்படலாம். உண்மையில் மார்பகத்தின் அளவிற்கும், தாய்ப்பால் சுரப்புக்கும் சம்பந்தமே இல்லை.


சிறிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு அதிக அளவில் தாய்ப்பால் சுரப்பதும், பெரிய மார்பகம் கொண்ட பெண்ணுக்கு குறைவான அளவில் தாய்ப்பால் சுரப்பதும் நடைமுறையில் நாம் காணும் ஒன்றுதான். மார்பகத்தில் உள்ள திசு சுரப்பிகளின் எண்ணிக்கையையும், அவை தூண்டப்படும் விதத்தையும் பொறுத்தே ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்கு தாய்ப்பால் சுரக்கும் என்பதை கண்டுபிடிக்க முடியும்.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற ஆர்வம் கூட அந்தப் பெண்ணுக்கு தாய்ப்பால் சுரப்பு திசுக்களை தூண்டிவிடலாம்.


பிறந்த குழந்தைக்கு முதல் உணவாக டாக்டர்கள் பரிந்துரை செய்வது அதன் தாய்ப்பாலைத்தான். அதில் இல்லாத சத்துக்களே கிடையாது. தாயிடம் இருந்து முதன் முதலாக கிடைக்கும் பாலை சீம்பால் என்கிறார்கள். பிறந்த குழந்தையின் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும். சீம்பாலில் அந்த சக்தி அதிகமாக உள்ளது. அந்த சீம்பாலைக் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் அதன் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதனால், எளிதில் அந்தக் குழந்தையை எந்த நோயும் தாக்காது.


நீண்ட நாட்களுக்கு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று ஆராய்ச்சிகளே நிரூபித்துள்ளன. இதுமட்டுமின்றி, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்க்கும், குழந்தைக்கும் இடையேயான பாசப் பிணைப்பு பலப்படுகிறது.

ஒரு தாயானவள், தனது குழந்தையை மார்போடு அணைத்து பால் ஊட்டும் போது, அந்த குழந்தைக்கு தாயின் அன்பு, அரவணைப்பு, பாசம், பாதுகாப்பு கிடைக்கிறது. இவை ஒரு குழந்தையின் நல்ல மன வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகிறது. இவை கிடைக்காத குழந்தைகள் சமூக விரோதிகளாக மாறி விடுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


ஆனால், இன்றைய அவசர உலகில், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கவே நேரம் இல்லை.அதனால் விரைவிலேயே புட்டிப்பாலுக்கு தாவி விடுகிறார்கள். அத்துடன், தாய்ப்பால் சுரப்பும் அவர்களிடம் குறைந்து போய் விடுகிறது. அவர்கள், மனதை அமைதியாக வைத்திருந்தால் தாராளமாக தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் சுரப்பில் பிரச்சினையே இருக்காது என்கிறார்கள் மருத்துவர்கள்.


தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.


பிரசவத்திற்கு பிறகு முதல் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பில் வாய் வைத்து சுவைக்க தெரியாத காரணத்தால் அதிகம் பால் சுரப்பதில்லை. அதைத் தவறாக எண்ணக் கூடாது. குழந்தை நன்றாக சுவைக்க ஆரம்பித்தவுடன், தோண்டத் தோண்ட கிணற்றில் சுரக்கும் தண்ணீர் போல் தாய்ப்பாலும் சுரக்க ஆரம்பித்து விடும்.

வேலைக்கு செல்ல வேண்டும் என்கிற அவசரம் - பதட்டம், மன நெருக்கடி, கோபம் போன்றவற்றுக்கு ஒரு தாய் ஆளானால் அவரிடம் தாய்ப்பால் சுரப்பு குறைந்து போகும். அதனால் தாய்மார்களே… உங்கள் மனதை எப்போதும் ரிலாக்ஸ் ஆக வைத்திருங்கள்.


மேலும், ஒவ்வொரு தாய்மார்களும் தாய்ப்பால் கொடுப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

அதற்கு சில டிப்ஸ்:


தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.


குழந்தையானது மார்பக காம்பை நன்றாக சப்பிப் பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பைத் தனது வாயால் சரியாகப் பற்றி இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.


குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்.


தாய்ப்பால் குடித்த குழந்தைக்குத் தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக் கூடாது.


குழந்தையைப் படுக்க வைக்கும் போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக் கொள்ள வேண்டும்.

Thanks regards. www.nidur.info/

Thursday, August 19, 2010

இன்ஷால்லாஹ் உங்களின் உதவியை நாடி இந்த சிறுவன் ..!!

அஸ்ஸலாமு அலைக்கும்.

இணைப்பிலுள்ள போட்டோவில் இருக்கும் பாலகனுக்கு பிறப்பிலிருந்தே மலத்துவாரமும் சிறுநீர் துவாரமும் இல்லாமல் பிறந்து, தற்போது மிகுந்த சிரமத்திற்கு இடையில் சுமார் 4-5 இலட்ச ரூபாய் செலவு செய்து விலாவின் பக்கவாட்டில் செயற்கை துளையிட்டு உயிர் வாழ்ந்து வருகிறான் (அல்ஹம்துலில்லாஹ்)

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த முறையில் 8-12 மாதங்கள் பின்பற்றலாம். தமிழக அரசின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் பிறவி நோய்களுக்குக் கிடையாது என்பதால் அதைப்பயன்படுத்த முடியவில்லை. எனினும் சிலரின் பரிந்துரையின்பேரில் மருத்துவச் செலவுகளை 3-4 இலட்சத்திற்குள் மருத்துவனை குறைத்துக் கொண்டு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளது.

இப்பாலகனின் தந்தை துபாயில் மிகக்குறைவான சம்பளத்தில் கடைமட்ட வேலையில் இருப்பதால் சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்ட முடியாமல் மிகவும் கஷ்டப் படுகிறார் என்ற தகவல் நண்பர் மூலம் கிடைத்தது.

அன்பிற்குறிய சகோதரர்களே, நம்மிடையே பிறந்து விட்ட இப்பாலகனின் கஷ்டத்தை நம்மில் சிலர் முன்வந்தால் வெகுவாகக் குறைக்கலாம்.எழுபது மடங்கு நற்கூலி கிடைக்கும் இந்த ரமலானில் உங்கள் ஜகாத், ஸதகாவை இப்பாலகனின் சிகிச்சைக்கும் கொஞ்சம் கொடுத்து உதவினால் இன்ஷா அல்லாஹ் பேருதவியாக இருக்கும்.

இம்மடல் கிடைக்கப்பெற்றவர்கள் தங்கள் நன்கொடையை கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.


BANK : ICICI - Ramanathapuram
Name : Asanali
A/C No. : 611601506962

சாதாரணமாக,பெரியவர்களுக்கே மலம், சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல் இருந்தால் ஏற்படும் வேதனை கொடுமையானது. இப்பாலகனின் நிலையை அறிந்து அல்லாஹ்வுக்காக மனமுவந்து தர்மம் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் செல்வத்தை பெருக்கச் செய்வான் இன்ஷா அல்லாஹ்.

இத்துடன் மருத்து ரிப்போர்ட் நகலை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மூலமோ தேவையான நிதி திரட்டி மேற்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம். இச்சிறுவனின் தந்தையின் தொலைபேசி எண்ணில் (055 463 8930) தொடர்பு கொண்டு மேலதிக தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

வஸ்ஸலாம்


Dear,

Please find attached all detials of Mohamed Arfan S/o Dhulbagthur Ali,
who is in big trouble, kindly forward all and ask help and dua as
well.

Please Note his address:

S.DHULBAGATHUR ALI, / WASIFA,
PANNAKKARAI,
PERIYAPATTINAM POST,
RAMNAD DT,
TAMIL NADU,

TEL : 04567 - 252 449
MOBILE : 9443 985157
Email ID : safi_rafi2001@yahoo.com

In Dubai - Dhulbagathur Ali - Mobile : 055 463 8930

With Thasleem
Dhulbagathur Ali.
-------------------------------------------------------
MEDICAL REPORTS :







நன்றி : மின்னஜ்சல் மூலம் சகோதரர் அனீஸ்.

Sunday, August 15, 2010

ஸஹாபாக்களின் வாழ்வினிலே... படிப்பினை

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

இஸ்லாமிய வரலாற்றில் கொள்கையை காக்கும் பொருட்டு முதன் முதலாக செய்யப்பட்ட ஹிஜ்ரத் அபிசீனியா ஹிஜ்ரத்தாகும். இந்த தியாகப் பயணத்தில் ஜாஃபர் இப்னு அபீதாலிப் [ரலி] அவர்களும் அவர்களது அருமை மனைவி அஸ்மா பின்த் உமைஸ் [ரலி] அவர்களும் அடங்குவர். பின்னாளில் நபி[ஸல்] அவர்கள் மதீனா ஹிஜ்ரத் செய்து அங்கு இஸ்லாமிய சாம்ராஜ்யம் நிறுவி, யூதர்களை கைபர் போரில் வெற்றி கொண்ட சமயத்தில் அபிசீனியாவில் இருந்த முஹாஜிர்கள் மதீனாவை வந்தடைந்தனர்.

அப்படி மதீனாவை வந்தடைந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களுக்கும், தியாக வேங்கை உமர்[ரலி] அவர்களுக்கும் ஒரு வாக்குவாதம். அதாவது அபிசீனியா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? அல்லது மதீனா ஹிஜ்ரத் செய்தவர்கள் இறைத்தூதருக்கு நெருக்கமானவர்களா..? என்று. இனி ஹதீஸில் இருந்து பார்ப்போம்;

[அபிசீனியாவில் இருந்து]மதீனாவிற்கு வந்தவர்களில் ஒருவரான அஸ்மா பின்த் ஹுமைஸ்[ரலி] அவர்கள், நபி[ஸல்] அவர்களின் மனைவியார் அன்னை ஹஃப்ஸா[ரலி] அவர்களை சந்திப்பதற்காக சென்றார்கள். பிறகு உமர்[ரலி] அவர்கள் தமது புதல்வி ஹஃப்ஸா[ரலி] அவர்களை காண அவர்களின் இல்லத்திற்கு சென்றார்கள்.

அப்போது ஹஃப்ஸா[ரலி] அவர்களுக்கு அருகில் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் இருந்தார்கள். உமர்[ரலி] அவர்கள் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களை கண்டபோது இவர் யார்.? என்று [தம் மகளிடம்] கேட்டார்கள்.

இவர் அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] என்று மறுமொழி பகர்ந்தார்கள் ஹஃப்ஸா[ரலி]. இவர் அபிசீனியரா..? கடல் மார்க்கமாக [மதீனா] வந்தவரா என்று உமர்[ரலி] கேட்டார்கள். அதற்கு ஆம் என்று அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் கூறினார்கள். அப்போது உமர்[ரலி] அவர்கள்,

உங்களுக்கு முன்பே நாங்கள் [மதீனாவிற்கு] ஹிஜ்ரத் செய்து வந்துவிட்டோம். எனவே உங்களை விட நாங்களே இறைத்தூதர்[ஸல்] அவர்களுக்கு உரியவர்கள் என்று கூறினார்கள். இதைக்கேட்டு அஸ்மா[ரலி] அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீது ஆணையாக! அப்படியில்லை. நீங்கள் இறைத்தூதர்[ஸல்] அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவர்களுக்கு அவர்கள் உணவளித்தார்க்கள்.

உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். நாங்களோ வெகு தொலைவில் இருக்கும் பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில் அல்லது பூமியில் இருந்தோம். அல்லாஹ்வுக்காவும், அவனது தூதருக்காகவுமே இதைச்செய்தோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீங்கள் சொன்னதை இறைத்தூதர்[ஸல்] அவர்களிடம் தெரிவிக்கும்வரை நான் எதையும் உண்ணவோ, குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம் , அச்சுறுத்தப்பட்டோம்.

இதை நான் இறைத்தூதரிடம் கூறுவேன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் பொய் சொல்லவும் மாட்டேன். திரித்துக் கூறவும் மாட்டேன். நீங்கள் கூறியதை விட எதையும் கூட்டிச்சொல்லவும் மாட்டேன் என்றார்கள்.

பின்பு நபி[ஸல்] அவர்கள் வந்தபோது, அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்கள் 'உமர் [ரலி] இன்னின்னவாறு கூறினார்கள்' என்றார்கள். அதற்கு நபி[ஸல்] அவர்கள், அவருக்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்..? என்று கேட்டபோது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா[ரலி] கூறினார்கள்.

அப்போது நபி[ஸல்] அவர்கள், உங்களைவிட அவர் எனக்கு உரியவர் அல்லர்; அவருக்கும் அவரது சகாக்களுக்கும் ஒரே ஒரு ஹிஜ்ரத் [செய்தசிறப்பு] தான் உண்டு. [அபிசீனியாவிலிருந்து] கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு இரண்டு [அபிசீனியா-மதீனா] ஹிஜ்ரத் [செய்த சிறப்பு] உண்டு என்று கூறினார்கள்.
நூல்;புஹாரி எண் 4230

அன்பானவர்களே! நாம் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புகார் அளிக்க செல்வோமாயானால், நாம் யார் மீது புகாரளிப்போமோ அவர்மீது அவர் சொன்னவை மட்டுமன்றி, சொல்லாதவைகளையும் இட்டுக்கட்டி நமது கருத்தை நிலைநாட்டிட, நமக்கு சாதகமான கருத்தை தீர்ப்பாக பெற்றிடவே முனைவது நம்மில் பலரது இயல்பாகவே உள்ளது.

இயக்கங்கள் பிரிவுக்குப்பின் பின் ஒருவரை ஒருவர் சேற்றை வாரி வீசிக்கொள்வதும் இந்த அடிப்படையில்தான். ஆனால் இந்த பொன்மொழியிலோ, இறைத்தூதர் மதீனாவை நோக்கி ஹிஜ்ரத் வந்தபின்னால் மதீனாவுக்கு புலம்பெயர்ந்து வந்தவர்களில் தாமே முதலானவர் என்பதை வைத்து, நாங்கள்தான் இறைத்தூதருக்கு உவப்பானவர்கள் என்று எதேச்சையாக உமர்[ரலி] அவர்கள் கூறியதைக் கண்டு சீரும்வேங்கையாக பொங்கி எழுந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி]அவர்கள், உமர்[ரலி] அவர்கள் குறித்து இறைத்தூதரிடம் புகாரளிக்க செல்லும் போது சொன்ன வார்த்தை, பொய்யுரைக்கமாட்டேன்; திரித்துக் கூறமாட்டேன்; நீங்கள் சொன்னதை விட கூடுதலாக ஒரு வார்த்தை கூட கூறமாட்டேன் என்றார்களே!

இது சஹாபாக்கள் தியாகிகளாக மட்டுமல்ல; வாய்மையாளர்களாகவும் திகழ்ந்துள்ளார்கள் என்பதற்கு வரலாறு கூறும் சான்றாகும். தனக்கு ஒருவனை பிடிக்கவில்லைஎன்றால் அவனை எங்ஙனமேனும் மண்ணை கவ்வவைக்க சபதமேற்று அவனைப்பற்றி 'கையில் மடியில்' போட்டு சொல்லும் கெட்ட குணத்தை கொண்டவர்களுக்கு இந்த அஸ்மா பின்த் உமைஸ்[ரலி] அவர்களின் வாழ்க்கை மிகப்பெரும் படிப்பினையாக உள்ளது.

பிறையால் ஏற்படும் பிளவுகள் குறையுமா..?

நாட்களையும், மாதங்களையும் தீர்மாணிப்பதற்குச் சூரியக் கணக்கு, சந்திரக் கணக்கு என்ற இரு முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. நேரத்தைச் சூரியனை அடிப்படையாக வைத்துத் தீர்மானித்தாலும் நாளையும், மாதத்தையும் சந்திரனை அடிப்படையாக வைத்துத் தீர்மானிப்பதுதான் பொருத்தமானதாகும். நோன்பு, ஹஜ், இத்தா போன்ற இஸ்லாமிய இபாதத்கள் சந்திர மாதக் கணக்கின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட வேண்டும்.

சந்திர மாதக் கணக்கைப் பொறுத்த வரையில் மாதம் 29 இல் அல்லது 30 இல் முடிவடையலாம். சூரியக் கணக்கைப் போன்று 28 இல் முடியும் மாதங்களோ, 31 இல் முடியும் மாதங்களோ சந்திரக் கணக்கில் கிடையாது.


29 ஆம் அன்று பிறை பார்க்கப்படும் அடுத்த மாதத்திற்கான தலைப் பிறை தென்பட்டால் புதிய மாதம் தோன்றி விட்டது எனத் தீர்மானிக்கப்படும். அப்படி இல்லையென்றால் இருக்கும் மாதம் 30 இல் முடிவதாகத் தீர்மானிக்கப்படும். சில போது தலைப் பிறை தோன்றி மேக மூட்டம், மழை காரணமாக பிறை தென்படாவிட்டால் கூட மாதத்தை 30 ஆகப் பூர்த்தி செய்தல் வேண்டும். இந்த அணுகுமுறையைக் கையாளும் போது சில இடங்களில் தெரியாத பிறை, மற்றும் சில இடங்களில் தென்பட வாய்ப்புள்ளது.

எனவே, நாட்களைத் தீர்மானிப்பதில் சில முரண்பாடுகள் தோன்றுவது இயல்பாகி விட்டது. ஆரம்ப காலத்தில் இது ஒரு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தவில்லை. எனினும், மார்க்க அறிவுள்ளவர்-அற்றவர் அனைவரும் மார்க்கம் குறித்து வாதம் செய்யும் நிலை அதிகரித்திருப்பதாலும், தொலைத் தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பிறை என்பது பெரும் குழப்பத்தை ஏற்படும் அம்சமாக ஆகிவிட்டது.

ஸஊதியில் பெருநாள் தொழுவதை நோன்புடன் தொலைக்காட்சியில் பார்க்கும் ஒருவருக்கு, தான் நோற்ற நோன்பு சரியானது தானா? என்ற எண்ணம் ஏற்படுவது இயல்புதான். இந்த வகையில் சமீப காலமாகப் பிறை தொடர்பாகப் பல வாதப் பிரதிவாதங்களும், ஏட்டிக்குப் போட்டியான பிரசார அணுகுமுறைகளும், இயக்கப் பிரிவுகளும் தோன்றி வரும் ஆரோக்கியமற்ற சமூகச் சூழலைச் சந்தித்து வருகின்றோம். ஒரு நாளைத் தீர்மானிப்பதில் இவர்களுக்குள் இத்தனை சர்ச்சைகளா? என்ற மாற்று மதச் சகோதரர்களின் ஏளனத்திற்குமுள்ளாகி வருகின்றோம்.

சர்ச்சைகளுக்கான முதல் காரணம்:பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் பிறை தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் கொண்ட ஒரு குழு இருக்கும். இவர்கள் பெரும்பாலும் குர்ஆன்-ஸுன்னா என்ற தூய வட்டத்தை விட்டும் சற்று விலகியவர்களாகவே இருப்பர். இவர்களின் மெத்தனப் போக்கே இந்தச் சர்ச்சை பூதாகரமாக எழுந்ததற்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினால் மிகையாகாது.

பிறை கண்டதாக அறிவித்தால் ஏற்க மறுப்பது, தகவல் உண்மையாக இருந்தாலும் கூட்டம் முடிந்த பின்னர் வந்த தகவல் என்பதற்காக ஏற்க மறுப்பது, ஸஹர் நேரத்தில் பெருநாளை அறிவிப்பது போன்ற செயற்பாடுகளால் பிறைக் குழுக்கள் மீது மக்கள் குறை காண முற்பட்டனர். எனவே, மாற்றுத் தீர்வுக்காக மக்கள் மனம் அலைபாய ஆரம்பித்தது.அந்தந்தப் பிரதேசங்களில் பிறை கண்டு நோன்பு நோற்றல், பெருநாளைக் கொண்டாடுதல் என்ற நிலைப்பாட்டிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக மாற ஆரம்பித்தனர்.

அந்தந்தப் பிரதேசத்துப் பிறையை வைத்து நோன்பையும், பெருநாளையும் தீர்மானிப்பது என்பது தவறான நிலைப்பாடு அல்ல. ஸஹாபாக்கள் காலத்திலிருந்து இந்த நடைமுறைதான் இருந்து வருகிறது. இருக்கின்ற நடைமுறை குர்ஆன்-ஸுன்னாவுக்கு முரண்படவில்லை என்றால் அதை மாற்றுவதற்காகப் பெரிய சமூக சவாலைச் சந்திக்க வேண்டியதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும். எனினும், பிறைக் குழுவிலுள்ள குறைகளாலும் தொடர்ந்து ஏற்பட்டு வந்த சிக்கல்களாலும் சர்வதேசப் பிறை என்ற சிந்தனை உருவானது.

பிறை பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எங்கு பிறை தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் பிறை பார்த்தல் என்பது நடந்து விட்டது. உள்நாடு-வெளிநாடு என்று நபி(ஸல்) அவர்கள் பிரிக்கவில்லை. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்த நாடுகள். இவை ஒன்றாக இருக்கும் போது ஒரு பிறை; அரசியல் காரணங்களுக்காகப் பிரிந்த பின்னர் மூன்று பிறைகளா? இலங்கையில் விடுதலைப் புலிகள் தனி நாடு கேட்கின்றனர். அப்படித் தனி நாடு கொடுக்கப்பட்டால் கொழும்பில் கண்ட பிறை வடகிழக்கு முஸ்லிம்களுக்குப் பொருந்தாதா? என்றெல்லாம் வாதம் செய்யப்பட்டது.

ஒரு இறைவன்! ஒரு தூதர்! ஒரு கிப்லா!

பிறை மட்டும் ஏன் ஒன்றாக இருக்கக் கூடாது? என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் நியாயமாக மக்களால் நோக்கப்பட்டன.இச்சந்தர்ப்பத்தில் குர்ஆன்-ஸுன்னா பேசியோர் இரு கூறுகளாகப் பிரிந்தனர். சிலர் சர்வதேசப் பிறைதான் சத்தியமானது; உள்நாட்டுப் பிறை என்பது அசத்தியம் என்ற தோரணையில் பேச ஆரம்பித்தனர். இந்தக் கருத்து வேறுபாடு பெரும் பிளவாக மாறியது.

உள்நாட்டுப் பிறையை வைத்தே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கருத்துள்ள அறிஞர்கள் சர்வதேசப் பிறையை வன்மையாக மறுக்காததால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு இந்தப் பிரசாரப் போராட்டம் ஓய்ந்தாலும், இதன் காரணமாக ஏற்பட்ட ரணங்கள் ஆறவில்லை. ஏற்பட்ட பிளவு, பிளவாகவே இருந்து வந்தது. காலப் போக்கில் சர்வதேசப் பிறையிலும் சில நடைமுறைச் சிக்கல்கள் தோன்ற ஆரம்பித்தன. பிறை பார்த்தல் என்ற ஸுன்னாவுக்கு இடமில்லாமல், பிறை கேட்டல் என்ற நிலை ஏற்பட்டது. குறிப்பாக வளைகுடா நாடுகளில் தொழில் புரிவோர் தரும் தொலைபேசிச் செய்திகளே சர்வதேசப் பிறையைத் தீர்மானிக்கும் சாட்சியங்களாகின. சர்வதேசப் பிறைப் படி நோன்பு நோற்போரே, ஒரு நாள்-இரு நாட்கள் வித்தியாசத்தில் ஒரே நாட்டில் நோன்பையும், பெருநாளையும் அனுஷ்டிக்கும் நிலை ஏற்பட்டது. முழு உலகத்திற்கும் ஒரே நாளில் நோன்பு-பெருநாள் எனப் பிரசாரம் செய்தவர்கள், ஒரே வீட்டிற்குள் இரண்டு பெருநாட்களைக் கொண்டாடும் நிலையை ஏற்படுத்தினர்.

சர்வதேசப் பிறையிலும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை எனும் போது, மக்கள் மனதில் பிறையைக் கணிப்பீடு செய்தல் என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது. இந்தக் கருத்து சர்வதேச மட்டத்திலும் வளர்ந்து வரும் அதே வேளை, தமிழகத்தில் அமைப்புகளைத் துண்டாடுமளவுக்குச் செல்வாக்குப் பெற்று வருகின்றது. இலங்கையில் சிலரின் மனதில் இப்போதுதான் இந்த எண்ணம் துளிர் விட ஆரம்பித்துள்ளது. காலத்தைக் கணிப்பீடு செய்யத் தெரியாத உம்மத்தாக இருக்கும் போதுதான் பிறை பார்த்து நோன்பு பிடிக்க நபி(ஸல்) அவர்கள் ஏவினார்கள். இப்போது காலத்தைக் கணிப்பிடும் அறிவை நாம் பெற்று விட்டோம். நூறு வருடங்களுக்கு நோன்பு-பெருநாள் எப்போது வரும் என்பதை நாம் இப்போதே தீர்மானித்து விடலாம் என இத்தரப்பினர் வாதிடுகின்றனர்.

ஒரு காலத்தில் முஸ்லிம்கள் வானியல் அறிவில் அரசர்களாக இருந்த போது கூட இந்த எண்ணம் முஸ்லிம் உம்மத்திற்கு ஏற்படவில்லை. அடுத்து, பிறையைப் பார்க்க வேண்டும்! என்ற உத்தரவை எப்படிக் கைவிடுவது என்பதும் புரியவில்லை. எனினும், சர்வதேசப் பிறைக் குழுவினர் எப்படித் தமது வாதத்திற்குத் தொலைத் தொடர்பு வசதிகள் பெருகியதை ஆதாரமாக முன்வைத்தனரோ, அதே போன்று விஞ்ஞான வளர்ச்சியை இத்தரப்பார் ஆதாரமாக முன்வைக்கின்றனர். “பிறையைப் பார்க்க வேண்டும் என்று கூறும் போது, நீங்கள் நிழலைப் பார்த்து அதான் கூறுகின்றீர்களா?” அதே போன்று, “காலத்தைக் கணித்து அந்தக் கணிப்பின் பிரகாரம் நோன்பையும், பெருநாளையும் கொண்டாடினால் என்ன குற்றம் வந்து விடப் போகின்றது?” எனக் கேட்கின்றனர். இந்தக் கேள்விகள் நியாயமானவையாகத் தென்பட்டாலும் முடிவுகளைச் சரியானவை என்று கூற முடியாது. அது இந்தக் கட்டுரையின் நோக்கமுமல்ல.

பிறை தொடர்பான இந்தக் கருத்து வேறுபாடுகளால் குர்ஆன்-ஸுன்னா பேசும் அமைப்புகள் பிளவுபட்டு ஒருவரை மற்றவர் பகைத்துக்கொள்ளலாமா? ஒருவரை மற்றவர் தரக் குறைவாக விமர்சிக்கலாமா? ஹறாத்தைச் செய்பவர்கள் எனக் கண்டிக்கலாமா?இது இஜ்திஹாதுக்கு உரிய ஒரு மஸ்அலாவாகும். இது விடயத்தில் இஜ்திஹாதான அம்சங்களில் நாம் கடைபிடிக்க வேண்டிய அம்சங்களைக் கடைபிடிக்கின்றோமா? என்பது பற்றி தெளிவுபடுத்துவதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.

பார்வைகள் வித்தியாசப்பட இடமுண்டு:ஒரு ஆயத்தை அல்லது ஹதீஸை நல்ல நோக்கத்துடன் ஆராயும் இருவர், இரு வேறுபட்ட முடிவுகளை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது. நோக்கமும், ஆராயும் வழிமுறையும் சரியாக இருந்தால் இரு கருத்துகளை வெளியிட்டவர்களும் கண்டிக்கப்பட மாட்டார்கள் என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
“ஒரு ஆய்வாளன், ஆய்வு செய்து சரியான முடிவைக் கண்டால் அவனுக்கு இரு நற்கூலிகளும், தவறான முடிவைக் கண்டால் ஒரு நற்கூலியும் வழங்கப்படும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(புகாரி: 3662, 344, 7351, 6919, முஸ்லிம்: 1716, 4584, 3576, அபூதாவூத்: 3574, திர்மிதி: 1326)

இங்கே தவறான முடிவை எடுத்தவர் கண்டிக்கப்படவில்லை. இந்த மார்க்கத்திற்குச் சொந்தக்காரனான அல்லாஹ்வே அவருக்கு நற்கூலியைக் கொடுக்கும் போது, அவரைக் கண்டிக்கும் உரிமையை எமக்குத் தந்தது யார்? என்பது சிந்திக்க வேண்டிய அம்சமாகும்.

அடுத்துத் தீர்ப்புக் கூறுவோர் அதற்குத் தகுதியானவராக இருக்க வேண்டும். தகுதியில்லாதவர்கள் இதில் தலையிடக் கூடாது! என்பது கவனிக்கப்பட வேண்டும். ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட “அல்ஹாகிம்” என்ற பதம் இதை உணர்த்துகின்றது.

அடுத்து, ஒருவரது தீர்ப்புத் தவறு என்பது தெளிவானால் தீர்ப்பை வெளியிட்டவர் கண்டிக்கப்படாத அதே வேளை, தவறான முடிவு புறக்கணிக்கப்பட வேண்டும் என்பதும் கவனிக்கத் தக்கதாகும்.

ஒரு வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாகப் புரிந்துகொள்ளும் சாத்தியம் இருப்பதை உணர்த்த மற்றுமொரு நிகழ்ச்சியைக் கவனத்திற்கொள்ளலாம்.

“அப்துல்லாஹ் இப்னு உபை” எனும் முனாஃபிக் மரணித்த போது, நபித் தோழரான அவனது மகன் நபியவர்களிடம் வந்து, தனது தந்தைக்காக ஜனாஸாத் தொழுகை நடத்துமாறு கேட்டுக்கொண்டார். அவருக்காகத் தொழுகை நடத்த நபி(ஸல்) அவர்கள் முற்பட்ட போது உமர்(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களது ஆடையைப் பிடித்துக் கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! இவனுக்காகத் தொழுகை நடத்தப் போகின்றீர்களா? உங்களது இரட்சகன் இவனுக்குத் தொழுகை நடத்துவதைத் தடுத்துள்ளான் அல்லவா?” எனக் கேட்டார்கள்.

அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “அல்லாஹ் தடுக்கவில்லை.

“(நபியே!) அவர்களுக்காக நீர் பாவ மன்னிப்புக் கோருவீராக! அல்லது பாவ மன்னிப்புக் கோராதிருப்பீராக! நீர் அவர்களுக்காக எழுபது தடவைகள் பாவ மன்னிப்புக் கோரினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான். அல்லாஹ்வையும், அவனது தூதரையும் அவர்கள் நிராகரித்தமையே இதற்குக் காரணமாகும். அல்லாஹ் பாவிகளான இக்கூட்டத்தாரை நேர்வழியில் செலுத்த மாட்டான்.” (9:80)

என்ற வசனத்தில் எனக்குப் பாவ மன்னிப்புக் கேட்பதா? இல்லையா? என்பதைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தந்துள்ளான். நான் அவருக்காக எழுபதுக்கும் அதிகமான தடவைகள் மன்னிப்புக் கேட்பேன்!” என்றார்கள்.

பின்னர், “அவர்களில் மரணித்து விட்ட எவனுக்காகவும் ஒரு போதும் நீர் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்!..” (9:84) ….. என்ற வசனம் அருளப்பட்டது. (புகாரி 4670, 4393)

மேற்படி சம்பவத்தில் ஒரு வசனத்தை உமர்(ரழி) அவர்கள் நோக்கிய விதமும், நபி(ஸல்) அவர்கள் நோக்கிய விதமும் வித்தியாசப்பட்டுள்ளது.

இது முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுவிப்பது குறித்து நேரடியான சட்டம் வர முன்னர் நடந்த சம்பவம். மேற்படி (9:80) வசனம் முனாஃபிக்களுக்காக பாவ மன்னிப்புத் தேடக் கூடாது! என்று கூறுகின்றது. ஜனாஸாத் தொழுகையில் இறந்தவருக்காகப் பாவ மன்னிப்புக் கோரப்படுகின்றது.

எனவே, முனாஃபிக்களுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தக் கூடாது! என உமர்(ரழி) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் மேற்படி வசனம் முனாஃபிக்களுக்குப் பாவ மன்னிப்புக் கோருவதைத் தடுக்கவில்லை. தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனக்குத் தந்துள்ளது என நபி(ஸல்) அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். ஒரே வசனத்தை இருவர் இரு வேறு விதங்களாக விளங்க வாய்புள்ளது என்பதை உணர்த்துவதற்காகவே இந்தச் செய்தியைக் கூறினோம்.

பார்வைகள் வித்தியாசப்படுவதுண்டு:
நேரடியான முடிவு கூறப்பட்ட விடயத்தில் வித்தியாசமான விளக்கம் கூற முடியாது. ளுஹர் தொழுகையின் றகஅத்கள் நான்கு என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தால் இது கண்டிக்கத் தக்க கருத்து வேறுபாடாகும். ஏனெனில், முடிவு தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. முடிவு கூறப்படாத ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய அம்சத்தில் அவரவரது பார்வை, சிந்தனை, உணர்வுகள், அவரவர் முக்கியத்துவம் கொடுக்கும் துறை என்பவற்றுக்கு ஏற்ப மாறுபட்ட முடிவுகள் வர வாய்ப்புள்ளது.

இஸ்லாத்தில் நடந்த முதல் போரான “பத்ர்” கைதிகள் குறித்து அபூபக்கர்(ரழி) அவர்களதும், உமர்(ரழி) அவர்களதும் முடிவுகள் வித்தியாசமாக இருந்தன.
உமர்(ரழி) அவர்கள் இஸ்லாத்தின் பாதுகாப்பையும், அபூபக்கர்(ரழி) அவர்கள் குடும்ப உறவு, சமூகப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டும் கருத்துக் கூறினார்கள். எனவே, கைதிகளைக் கொல்ல வேண்டும் என்று உமர்(ரழி) அவர்கள் கூற, அவர்கள் விடயத்தில் மென்மையான கருத்தை அபூபக்கர்(ரழி) அவர்கள் கூறினார்கள்.
இதை வைத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் காஃபிர்களுக்கு support பண்ணுவதாகவோ, வளைந்து கொடுப்பதாகவோ, சமாளிப்பதாகவோ, கொள்கையில் தடம் புரண்டு விட்டதாகவோ உமர்(ரழி) அவர்கள் விமர்சனம் செய்யவில்லை.

பிரிவினை ஏன்?
குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே சில மஸ்அலாக்களில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. மற்றும் சில விடயங்களைப் பொறுத்த வரையில் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களாக உள்ளன. இதில் தாராளமாக விட்டுக் கொடுத்து நடக்கலாம்.மற்றும் சில அம்சங்கள் இஸ்லாம் அங்கீகரித்தவை. ஏற்றுக்கொள்வதற்கும், சந்தர்ப்ப-சூழ்நிலையை அவதானித்துத் தவிர்த்துக்கொள்வதற்கும் அனுமதி உள்ள அம்சங்கள். இது நிர்வாக ரீதியாக எடுக்கப்படும் முடிவுகளாக இருக்குமே தவிர கொள்கை ரீதியானதாகவோ, மார்க்கச் சட்டதிட்டத்தின் அடிப்படையில் எதிர்த்துப் பிரசாரம் செய்வதற்குரியதாகவோ இருக்காது. இந்த மூன்று அம்சங்களிலும் ஒருவர் மற்றவரை விமர்சனம் செய்யாமல் சுமுகமான உறவைக் கையாளலாம்.

இவற்றுக்கு உதாரங்களாகப் பின்வரும் செய்திகளைக் கூறலாம்;

-1- விட்டுக் கொடுத்துப் புரிந்துணர்வுடன் அவரவர் கருத்துப் படி அமல் செய்வதைத் தடுக்காத போக்கைக் கைக்கொள்ள வேண்டிய அம்சம் :

இமாம் சத்தமிட்டு ஓதும் தொழுகைகளில் பின்னாலுள்ளவர்கள் சூறதுல் ஃபாதிஹாவை ஓத வேண்டுமா? அல்லது கேட்டுக்கொண்டிருந்தால் மட்டும் போதுமா?

-2- இஜ்திஹாதுக்குரிய அம்சம்
உள்நாட்டுப் பிறையா? சர்வதேசப் பிறையா? எதை வைத்து அமல் செய்வது? உறுப்பு தானம் செய்யலாமா?

-3- நிர்வாக ரீதியான முடிவு:
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து சமூகச் சேவைக்காகவும், அழைப்புப் பணிக்காகவும் நிதியைப் பெறலாமா? அல்லது தவிர்க்க வேண்டுமா?

இது போன்ற நிலையில் நாம் நிதி பெறுவதில்லை என முடிவு செய்துள்ளோம். நீங்கள் நிதியைப் பெற்றுச் சேவை செய்வதென்றால் எமக்கு ஆட்சேபனையில்லை என்ற போக்கே கடைபிடிக்கப்பட வேண்டும்.

எனினும், குர்ஆன்-ஸுன்னா பேசுவோரிடையே ஷைத்தான் பிரிவினையை உண்டுபண்ணவும், தப்பபிப்பிராயங்களை வளர்க்கவும், அவதூறுகளையும், போலியான குற்றச்சாட்டுகளை உருவாக்கவும் இத்தகைய சாதாரணப் பிரச்சினைகளைத்தான் பயன்படுத்துகின்றான் என்பது ஆச்சரியமான செய்தியாகும்.

அகீதாவில் ஒன்றுபட்டவர்கள் இத்தகைய சாதாரணக் கருத்து வேறுபாடுகளால் முரண்பட்டு நிற்பதும், நீதி-நியாயங்களையும், இஸ்லாமிய வரம்புகளையும் மீறிக் கோபத்தையும், குரோதத்தையும் வெளிப்படுத்துவதையும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? பிறை போன்ற அம்சங்களை அடிப்படையாக முன்வைத்து இயக்கங்களைத் துண்டாடுவதையும், ஆலிம்களைப் புறக்கணிப்பதையும் எப்படி நியாயப்படுத்த முடியும்?

அனைத்திலும் குர்ஆன்-ஸுன்னா பேசுவோர் அகீதா ரீதியான முரண்பாடுகளைக் கையாள்வதை விட மிக மோசமான வெறியுணர்வுடன் இஜ்திஹாதுக்குரிய அம்சங்களை எப்படிக் கையாள முடியும்? உண்மையில், மார்க்கத்தில் பற்றிருந்தால் இந்த நிலை உருவாகியிருக்காது. தனிநபர் மீதுள்ள பற்றும், பகையும், தனியான அமைப்புகள் மீதுள்ள முத்திப் போன பக்தியும்தான் இத்தகைய பகையை ஏற்படுத்துகின்றன.

எனவே, இஜ்திஹாதுக்குரிய அல்லது சாதாரண நிர்வாக ரீதியான முடிவுகள் எமது சகோதரத்துவத்தையோ, பிரசார அமைப்புகளையோ சிதைக்காத விதத்தில் கையாளப்பட வேண்டும்.

பிறை விடயத்தில் இதன் பின் ஒன்றுபட்ட முடிவு வருவதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கின்றது. இஜ்திஹாதுக்குரிய அம்சம் என்ற வகையில் சுய ஆய்வை இது விடயத்தில் விட்டுக் கொடுப்பது கூடக் குற்றமாகாது. குறிப்பாகப் பிறை விடயத்தில் இஸ்லாமே விரிந்த தாராளப் பார்வையைத்தான் வேண்டி நிற்கின்றது. அப்படி வர முடியாது போனால் கூட பிறையால் பிளவுபட்டுப் பகையுணர்வுடன் செயற்படும் இந்த நிலையையாவது நீக்குவதற்கு நாம் நிச்சயமாகச் செயற்பட வேண்டிய காலத்தின் கட்டாயத்திலுள்ளோம். இதனைக் கருத்திற்கொண்டு களப்பணி புரிவோமாக!

எழுதியவர் :மௌலவி S.H.M. இஸ்மாயில்

Saturday, August 14, 2010

முதலில் போதிக்க வேண்டியது அகிதாவா ? கிலாபத்தா ?

மக்கள் மத்தியில் இஸ்லாமிய பிரச்சாரப் பணியினை கொண்டு செல்லும்போது முதலிடம் கொடுக்க வேண்டிய அம்சம் எது? என்பதில் சிலர் பிரச்சினைப்படுகிறார்கள்.

“இஸ்லாமிய அரசாங்கம்”(கிலாபத்) நிறுவுவது சம்பந்தமாகவே முஸ்லிம்களை வழிநடத்த வேண்டும்.
அரசாங்கம் உருவாகினால் தான் இஸ்லாத்தை முழுமையாக பின்பற்றக் கூடியதாகவும் அதிகாரபூர்வமாக நன்மையை ஏவி தீமையை தடுக்கக்கூடியதாகவும் இருக்கும்.
எனவே கிலாபத் அமைப்பது பற்றிய போதனைகளை முதலில் போதிக்கவேண்டும், என்கிறார்கள்.

மார்கக் விவகாரங்கள் பற்றிய முரண்பாடுகளோ அகீதா பற்றிய சீர்குலைவுகளோ ஏனைய விடயங்கள் பற்றிய விளக்கங்களோ பேசி மக்களிடையே பிரச்சினைகள் ஏற்படுத்தாமல், மக்கள் எந்தெந்த நம்பிக்கைகளில் -கொள்கைகளில்- இருந்து செயற்படுகிறார்களோ அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு வேண்டும், என்கிறார்கள்.

அகீதா பற்றியும் ஸுன்னாவுக்கு முரணான விடயங்கள் பற்றியும் பேசி அவைகளை அடையாளம் காட்டி தஃவா செய்தால் சமூகம் பிளவுபட்டு விடும். ஒற்றுமை குழைந்து விடும். ஐக்கியம் கருதி அதனை விமர்சிக்காமல் விலகி நிற்க வேண்டும். அவரவர் விரும்புகின்ற போக்கில் விட்டுவிடவேண்டும், என்பதாக கூறுகிறார்கள்.

மக்கள் எல்லோரும் கருத்து வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடக் கூடிய பொது விடயங்கiளுக்கு முன்னுரிமை வழங்கி தஃவாவை முன்கொண்டு செல்ல வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும். அரசாங்கமொன்றை நிருவினால் அதிகாரபூர்வமாக ஒரே கொள்கையின் கீழ் மக்களை வழிநடத்தலாம் என வாதிக்கிறார்கள்.
உண்மையில் இந்த கொள்கையும் அணுகுமுறையும் சரியல்ல.

கேட்பதற்கு இனிமையாகவும் பார்பதற்கு அழகாகவும் இருந்தாலும் அடிப்படைக்கே முரணானதாகும்.

ஒரு முஸ்லிமுடைய இம்மை மறுமையின் வெற்றிக்கு அடிப்படையாக இருப்பது அகீதாவாகும். அல்லாஹ் மனிதர்களை படைத்ததன் அடிப்படை நோக்கம் கலப்படமற்ற தூய எண்ணத்துடனும், கலப்பில்லாத வணக்க வழிமுறைகளுடனும் அல்லாஹ்வை வணங்க வேண்டும் என்பதுதான்.

அல்லாஹ்வை நம்ப வேண்டிய விதத்தில் நம்பாமலும், அல்லாஹ்வுக்கு செலுத்த வேண்டிய வணக்கத்தில் பலரையும் கூட்டு சேரத்தும் (ஷிர்க் செய்தும்) செயற்படுவதும் அல்லாஹ்வுடைய வல்லமையை சிதைப்பதாகும்.

தனக்கு (ஷிர்க்) இணைவைப்பதை மன்னிக்க முடியாத பாவமாக அல்லாஹ் கூறுகிறான். மக்களிடம் ஷிர்க் நுழைந்த போதுதான் இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

மனித ஆத்மாக்களை படைத்து “நானல்லவா உங்கள் ரப்பு” என்று அல்லாஹ் கேட்டபோது “ஆம்! நீயே எங்கள் ரப்பு” என்றே ஆன்மாக்கள் பதில் கூறின. உலகிற்கு வந்த பின் அல்லாஹ்வை ரப்பாக ஏற்று அசல் வடிவில் வணங்காது வாழந்தபோதுதான் இந்த இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பிவைத்தான்.

இறைநம்பிக்கை ஒழுங்கில்லாமல் ஒரு முஸ்லிம் வாழும் காலம் எல்லாம் அவன் புரிகின்ற அத்தனை அமல்களும் பாழாகிவிடும்;
அதே நிலையில் அவன் மரணித்தாலும் தண்டனைக்குரியவனாக மாறிவிடுவான். எனவே பிரச்சாரப் பணியில் முதலிடம் கொடுக்க வேண்டியது அகீதாவை சீர் படுத்துவதிலும் பின்பற்றுவதிலும்தான்.

அல்லாஹ் தன்னைப் பற்றி குர்ஆனில் வர்ணிக்கின்ற பிரகாரமும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை பற்றி வர்ணிக்கின்ற பிரகாரமும் தான் ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும். அதுவே ஈமானுக்கு பாதுகாப்பாகும்.

அல்லாஹ் எங்கும் நிறைந்தவனா?
எல்லா பொருட்களிலும் வஸ்துகளிலும் அல்லாஹ் சங்கமிக்கிறான்
அல்லாஹ் ஷைக்கிடத்தில் சூபியிடத்தில் காட்சியளிக்கிறான். அவர்களுடன் பேசுகிறான்.
அமல்கள் இபாதத்கள் செய்தால் அல்லாஹ்வை நெருங்கமுடியாது.
அல்லாஹ்வை நெருங்குவதற்கு ஒரு புரோகிதர் (அவ்லியா) தேவை.
மறுமையின் வெற்றிக்கு அவரது சிபாரிசு தேவை, என்று ஒரு முஸ்லிம் நம்பினால்
அவன், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய ஈமானுக்கு மாற்றமான நம்பிக்கை கொண்டவனாக இருப்பான்.

பள்ளிக்குச் சென்று தொழுது அல்லாஹ்விடம் முறையிடுவதை விட கப்றுகளுக்குச் சென்று அங்கே அடக்கம் செய்யப்பட்டவர்களிடம் கையேந்தி கஷ்டங்களை முறையிட்டு காணிக்கைகள் செலுத்தி பிள்ளை வரம் கேட்டு கப்றுகளை சுற்றி வந்து மண்டியிடுதல் என்பது இறை நம்பிக்கைக்கு எதிரானது.

தகடு தாயத்துக்கள் எழுதி மேனியிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தொங்க விடுவதும் பாதுகாப்பு தேடுவதும் இறை நம்பிக்கைக்கு விரோதமானது.

அல்லாஹ்வுடைய இறுதி தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்றாமல் முன்மாதிரியாகக் கொள்ளாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களை வழிமுறைகளை சரிவர செயற்படுத்தாமல் அல்லாஹ்வுடைய தூதரின் ஸுன்னாக்களுக்கு மாற்றமாக சமுதாயத்தின் செயல்பாடுகளுக்கும் சடங்கு சம்பிரதாயங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் ஆதரவு கொடுத்து செயல்படுத்தல் என்பது இறைத் தூதரை நிராகரிப்பதற்கு சமமானதாகும்.

கலிமாவுக்கு மாற்றமாக மக்கள் செயல்பட்டாலும் சமுதாய ஒற்றுமை கருதி பயணிக்க வேண்டும் என்ற கோஷம் குப்ரியத்தில் கொண்டு போய் சேர்க்கும். இஸ்லாமிய அரசாங்கம் இருந்தாலும் இத்தகைய வழிகள் களையப்பட வேண்டும். இஸ்லாமிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் களையெடுக்க பாடுபட வேண்டும்.

இறைத் தூதர்களை அல்லாஹ் அனுப்பும்போது முதலில் அரசாங்கத்தை (கிலாபத்தை) அமைத்து பிறகு அகீதா பற்றிப் பேச அனுப்பவில்லை.
மாறாக அரசாங்க தலைவர்கள், மன்னர்கள் புரிகின்ற ஈமானுக்கெதிரான செயல்பாடுகளையும் சமூக விரோத செயற்பாடுகளையும் கண்டித்து தவ்ஹீதை எடுத்துச் சொல்லி; அந்த போதனை பிரகாரம் மக்களை வழிநடாத்தவே நபிமார்களை அனுப்பி வைத்தான்.”
அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள் அவனைத்தவிர வேறு கடவுள் இல்லை” என்றே எல்லா இறைத்தூதர்களும் பிரச்சாரம் செய்தார்கள்.அதனூடாக சமூக அவலங்களையும் சீர்கேடுகளையும் கண்டித்துப்பேசினார்கள்.

மூஸா நபி இஸ்ரவேல் மக்களின் விடுதலைக்காக போராடிய போதும்
லூத் நபி ஓரினச்சேர்க்கைக்கு எதிராக போராடிய போதும்
ஷூஹைப் நபி அளவை நிலுவை மோசடிக்கு எதிராக போராடியபோதும்
தவ்ஹீத் பிரச்சாரத்தை முன்வைத்தே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயணமானார்கள்.
முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் பிரசார பணியினை ஆரம்பித்த போது தவ்ஹீதை முதன்மை படுத்தியே 13 வருடங்கள் பாடுபட்டார்கள்.
எதிரிகள் இப்பிரசார பணியினை தடுக்கும் முகமாக சமரசம் செய்ய முனைந்த போதும் நபிகளார்(ஸல்) அவர்கள் விட்டுக் கொடுக்கவில்லை.
நபிகளாருடைய பிரசாரப் பணி மதீனாவில் தாக்கம் செலுத்தி மதீனத்து மக்கள் இஸ்லாத்தை தழுவியபின் மதீனாவை தளமாக கொண்டு படிப்படியாக கிலாபத்தை நோக்கி மக்களை நகர்த்தினார்கள்.
மதீனாவில் அருளப்பட்ட வசன அமைப்புக்களும் இதனை நன்கு தெளிவுப்படுத்துகின்றன.
எனவே பிரசாரப் பணியில் நபிகளாரின் இந்த வழிமுறைதான் பின்பற்ற வேண்டும். ஈமானுக்கு எதிராக, தூதுத்துவத்துக்கு எதிராக மக்கள் வாழ்கின்ற போது அகீதாவை பற்றியோ ஸுன்னாவைப் பற்றியோ பேசாமல், கிலாபத்தை பற்றி பேசவேண்டும் கிலாபத் சிந்தனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அல்லாஹ் விதித்த நியதிக்கே முரணானது.

இந்நிலையில் அகீதாவில் பிடிப்பு இல்லாமல் சுன்னாவுக்கு முக்கியமில்லாமல் சடங்கு சம்பிரதாய கொள்கையில் மரணிக்கின்ற மக்களுடைய நிலையோ படுமோசமாகி விடும் என்பதை கிலாபத் பற்றி பேசுபவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்.

கிலாபத் ஏற்பட முன் அகீதா பற்றி; பேசப் பயப்படுபவர்கள்
(ஒரு வாதத்திற்காக வழிகெட்ட கூட்டங்கள் பிரிவுகளின் ஆதரவில் கூட்டரசாங்கம் நடத்தினாலும்) கிலாபத் ஏற்பட்ட பின்பும் பேசவே மாட்டார்கள். ஆட்சி கவிழ்ப்பு நடந்து விடுமோ ஸ்தீரமற்ற ஆட்சி உருவாகி விடுமோ தலைமை பதவி பறிபோய்விடுமோ என்ற அச்சம்தான் இருக்குமே தவிர அகீதாவை சீர்படுத்தி ஆதாரபூர்வமான சுன்னாவை அமுல்நடாத்துகின்ற பற்றிய எண்ணம் இருக்காது.

இஸ்லாமிய நாட்டுக்குள்ளே இஸ்லாமிய ஆட்சியை உருவாக்குவதாக கூறியவர்களால் கூட அகீதாவின் அத்திவாரத்தில் இஸ்லாமிய ஆட்சியை இன்று வரை ஏற்படுத்தமுடியவில்லை.

இளைஞர்களை ஒன்று கூட்டி கிலாபத் பற்றி பேசி புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவர போராடும் இவர்களால் அந்த இளைஞர்களுக்கு ஈமான் பற்றியும் ஆதாரபூர்வமான சுன்னாவின் நிழலின் அமல்கள் பற்றியும் போதிக்க முடியவில்லை.

எப்படி வேண்டுமானாலும் நம்பிக்கை கொள்ளலாம் எப்படி வேண்டுமானாலும் அமல்கள்; செய்யலாம். எமது கிலாபத் பயணத்திற்கு அவைகளை தடைகளாக்கக்கூடாது என்பதே இவர்களது நோக்கமாகும்.

புரட்சிகரமான கிலாபத் சிந்தனைகளை வழங்கி ஆயிரக்கணக்கான அப்பாவி இளைஞர்களை பலி கொடுக்க முனைவதைவிட ஈமானிய உணர்வுகளை ஊட்டி பலபேருடைய ஹிதாயத்திற்கு வழிகாட்ட தயார்படுத்தலாம். .

மக்களிடத்தில் அகீதாவுக்கெதிரான கொள்கைளையும் சுன்னாவுக்கெதிரான செயற்பாடுகளையும் பேசுவதற்கு பயப்படும் இவர்கள் ¬குறைந்தபட்சம் தங்களுடைய வாழ்விலாவது அதை விட்டும் ஒதுங்கி வாழ்கிறார்களா என்றால்; அதுவுமில்லை.

தங்களுடைய வீடுகளிலும் ஜமாஅத்திலும்; குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமான விடயங்களை ஒதுக்காமல் செய்துகொள்கிறார்கள். தங்களுடைய வியாபார ஸ்தலங்களிலும அகீதாவுக்கு முரண்பட்டவைகளை விற்பனைசெய்கிறார்கள்.

தவ்ஹீதையும் பேசுவோம் ஷிர்க்கையும் செய்வோம்.
பித்அத்தையும் ஆதரிப்போம் சுன்னாவையும் தொட்டுக்கொள்வோம்.
எதையும் எதிர்க்கவுமாட்டோம். எல்லாவற்றையும் அரவணைக்கவுமாட்டோம்.

என்பதே இவர்களது கொள்கையாகும். ஆனால் ஒரு இறைவிசுவாசியின் கொள்கை அதுவாக இருக்காது.

உலகாயுதமும் மக்கள் செல்வாக்கும் கௌரவமான வாழ்வும்தான் இவர்களது இலக்காக தெரிகிறதே தவிர அதற்குத்தான் கிலாபத் கோஷமே தவிர, பரிசுத்தமான தீனை பின்பற்றுவதோ நிலைநாட்டுவதோ அல்ல.

இஸ்லாத்தின் ஆணிவேரை பிடுங்கி எறியத் துடிக்கும் தீய கொள்கைகள் உடைய வழிகெட்ட கூட்டங்கள் குறிப்பாக ஷீஆவும் ,காதியானியும் முஸ்லிம் சமூகத்திற்குள் ஊடுருவல் செய்தமைக்கு தீனை விட்டு கொடுக்கும் இவர்களது தாராளமான கொள்கைகளும் அரசியல் இலாபமே காரணம்.

படித்த மக்களோ பாமர மக்களோ இந்த வழிகேட்டின் அடையாளத்தை கண்டு கொள்ளாமல் அதில் போய் வீழ்ந்தமைக்கும் இந்தஅணுகுமுறையே காரணம்.

ஈரானில் ஏற்பட்ட ஷீஆ புரட்சியை இஸ்லாமிய புரட்சியாக சித்தரித்ததனால் இன்று ஷிஆயிஸம் வேகமாக பரவி வருகிறது.

ஸஹாபாக்களை, நபிகளாரின் மனைவிமார்களை தவறாக சித்தரிக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில காலங்களில் ஷிஆ-சுன்னி பிரச்சினை இந்த நாட்டிலும் (அவர்களது குடும்பத்திலும்) நடக்கலாம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

எனவே அகீதாவையும் தூய்மையான சுன்னாவையும் மக்கள் மத்தியில் வைத்து புனரமைக்கும் பணிக்கு முன்னுரிமை வழங்கினால் கிலாபத் ஏற்படாவிட்டாலும் ஈமானையாவது பாதுகாத்து ஈமானுடன் மரணிப்பதற்கு வாய்ப்பாக அமையும். வழிகேட்டை அடையாளம் கண்டு அதனை விட்டு தவிர்ந்து கொள்ளவும் உதவியாக இருக்கும்;. தீனுக்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தால் அதுவேபெரிய கிலாபத்தாகும்.எனவே அகீதாவுக்கு முதலிடம் கொடுத்து பிரசாரப்பணியினை செய்வோமாக! … இன்ஷால்லாஹ்

நன்றி : உஸ்தாத் இம்தியாஸ்(islamkalvi.com)

( மூச்சு முட்டும் வரை கிளபாத்தை பேசும் இளம் உள்ளங்கள் " இஸ்லாமிய ஆட்சி வந்தால் எல்லாவற்றுக்கும் முடிவு எட்டும் என்று நிச்சியம இல்லாத வற்றை பற்றி கனவு காண்கிறார்கள் " ஆனால் இவர்கலாலோ அல்லது இந்த கொள்கையை ஆதரிப்பவர்களோ தங்கள் தங்கள் இஸ்லாமிய ஊர்களில் கூட ஒற்றுமையை கொண்டு வர முடியவில்லை என்பது எதார்த்த நிலவரம் - நாம் ஒன்றும் கிலாபத் ஏற்பட கூடாது என்று சொல்லவில்லை , கிலாபத் என்ற கனவில் தற்போதைய எதார்த்த வாழ்வில் ஒரு இஸ்லாமியனாக செய்ய வேண்டிய விடையத்தை கோட்டை விட்டு விட கூடாது என்பதே )

அல்லாஹ்வே அனைத்தையும் நன்கு அறிந்தவன் !!

Friday, August 13, 2010

இஸ்லாமிய சட்டத்தில் முரண்பாடா ?

1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள்.

இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச் சென்றார்கள்.

அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள். அந்த அன்புத் தோழர்களின் அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்ம்கள் பரவி உள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் முஸ்ம்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில் செயல்படுகின்றனர்.

இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால் முஸ்ம்களில் ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 4:13,14)


அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:51,52)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

“மக்களே! நான் உங்களிடம் இரண்டு விஷயங்களை விட்டுச் செல்கின்றேன். அதைப் பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் ஒரு போதும் வழி தவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் 2. அவனது தூதரின் வழிமுறை” என்று நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜில் ஆற்றிய பேருரையில் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : ஹாகிம் (318)


“என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?” என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (7280)

நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கக் கடமையெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3243)

“(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : நஸயீ (1560)

இவ்வாறு திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் குர்ஆன் ஹதீஸை மட்டும் அடிப்படையாக வைத்து வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கட்டளையிடுகின்றன. ஆனால் மக்கள் இஷ்டப்படி தங்கள் மார்க்கக் கடமைகளைப் பலவிதமாக அமைத்துக் கொண்டு இவ்வாறு பல பிரிவுகளாக மாறியதற்குக் காரணம் என்ன?
இக்கேள்விக்குப் பவலவிதமான பதில்களைக் கூறலாம். அதில் முக்கியமான காரணம், முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் மார்க்கத்தின் அளவுகோலாக எடுத்துக் கொண்டது தான்.

இவ்வாறு முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதால் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உண்டாயின. ஆனால் சில பிரிவினர் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு நபிமொழிகளையும் திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரம் காட்டுகின்றர்.

முரண்பட்ட கொள்கைகளுக்கும் மாறுபட்ட சட்டங்களுக்கும் நபிமொழிகளில் ஆதாரம் இருக்குமா? என்ற நியாயமான கேள்வி எழலாம். இருக்காது என்று நாம் கூறினாலும் மாறுபட்ட சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் சில நபிமொழிகளை ஆதாரம் காட்டத் தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகின்றது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ஒரு சட்டத்தைக் கூறியிருப்பார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களாலேயே அது மாற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் மாற்றப்பட்ட செய்தியை அறியாதவர் நபி (ஸல்) அவர்களின் முந்தைய காலச் சட்டத்தை அறிவிப்பார். சிலர் இதை மட்டும் வைத்து சட்டம் சொல் விடுவர்.

நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?” என்று கேட்டேன். அதற்கு “மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), நூல் : புகாரி (293)

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

“பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (526), திர்மிதீ (102)

இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில் கொள்ளாதவர்கள் ஆரம்ப காலச் சட்டத்தைக் கூறி அதற்குரிய சான்றை மட்டும் கூறுவதால் மாறுபட்ட சட்டத்திற்கு நபிமொழியில் ஆதாரம் இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுகின்றது.

இதைப் போன்று நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவரின் உளூ முறியுமா? அல்லது முறியாதா? என்பதிலும் இரண்டு கருத்துக்கள் இரண்டு நபிமொழிகளை எடுத்துரைத்து ஆதாரம் காட்டுகின்றன.
“நெருப்பு தீண்டியவற்றில் உளூச் செய்யுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல்கள் : முஸ்ம் (527, 529), இப்னுமாஜா (478), அஹ்மத் (23439)

நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்ட போது நானும் அவர்களுடன் சென்றேன். அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து விருந்து படைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். பேரீச்சம்பழங்கள் நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார். அதையும் சாப்பிட்டார்கள். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதார்கள். பின்பு (மீதமிருந்த) இறைச்சியில் சிறிதளவை அந்தப் பெண் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமல் அஸர் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : திர்மிதீ (75), அபூதாவூத் 163), அஹ்மத் (13931)

இந்த இரண்டு செய்திகளில் ஒருவர் ஒரு செய்தியையும் மற்றொருவர் இன்னொரு செய்தியையும் வைத்து சட்டம் சொல்யுள்ளனர். ஆனால் பின்வரும் செய்தியை கவனிக்கத் தவறி விட்டனர்.

“இரண்டு விஷயங்களில் நெருப்பு தீண்டியவைகளில் உளூச் செய்யாமல் இருப்பது தான் நபி (ஸல்) அவர்களின் கடைசியான செயலாகும்”

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல்கள் : நஸயீ (185), இப்னு ஹுஸைமா (43), இப்னு ஹிப்பான் (1134)

ஒரே சட்டம் தொடர்பான சில ஹதீஸ்கள் ஆதாரப் பூர்வமானவையாகவும் சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் இடம் பெற்றிருக்கும். சிலர் தமது மத்ஹபை நிலைநாட்ட பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.

ஸஹ்ல் பின் பைளா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசல் தான் (ஜனாஸா) தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (1615)

“யார் பள்ளியில் மய்யித்திற்குத் தொழுவிப்பாரோ அவருக்கு எந்த ஒன்றும் கிடையாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர)
நூல்கள் : அபூதாவூத் (2776), இப்னுமாஜா (1506), அஹ்மத் (9353)

இந்த செய்தி பலவீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள ஸாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்.

ஆதாரப்பூர்வமான செய்தியை எடுத்துக் கொள்ளாமல் பலவீனமான செய்திகளை எடுப்பதால் சட்டத்தில் இரு வேறுபட்ட வடிவங்கள் தெரிகின்றன.

திருக்குர்ஆன் நபிமொழியின் அடிப்படையில் தான் சட்டங்களை வகுக்க வேண்டுமென்ற நிலையிருந்து இறங்கி, நபித்தோழர்களின் கூற்றுக்களையும் ஏற்றுக் கொள்வதால் முரண்பட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள், “நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)” என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (2689)

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னர் சிலர், உமர் (ரலி) அவர்களின் சட்டத்தின் அடிப்படையில் முத்தலாக் என்று கூறினாலும் மூன்று தலாக்காகவே எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதைக் கவனித்து செயல்பட்டுள்ளனர்.
நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, “லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்” என்று கூறிவிட்டு, “நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்ற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம், நூல் : புகாரி (1563)

அன்றைய ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள், தமத்துஉ என்ற ஹஜ் செய்யக் கூடாது என்று கூறிய போது, நபி (ஸல்) அவர்கள் செய்த செயலை எந்த மனிதரின் சொல்ற்காகவும் விட மாட்டேன்’ என்று கூறி நபி (ஸல்) அவர்களின் கூற்றே முதன்மையானது, பின்பற்ற ஏற்றது என்பதை அலீ (ரலி) தெளிவுபடுத்துகின்றார்கள்.
ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், “அது அனுமதிக்கப்பட்டதே!” என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், “உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!” என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), “என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா? அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?” என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், “நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்” என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), “நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்” என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாம், நூல் : திர்மிதீ (753)

அன்றைய ஜனாதிபதியும் தமது தந்தையுமான உமர் (ரலி) அவர்களின் கூற்றை இப்னு உமர் (ரலி) புறக்கணித்ததிருந்து நபித்தோழர்களின் கூற்று ஆதாரமாகாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

இது போன்ற காரணத்துக்காகத் தான் இஸ்லாமிய சட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் காண்கின்றோம்.

-எம்.ஐ சுலைமான்

நோன்பின் சட்டங்களை சுறுக்கமாக அறிந்து கொள்வோம் !

இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் தொழுகைக்கு அடுத்த நிலையில் நோன்பு அமைந்துள்ளது. எனவே, நோன்பு தொடர்பாக ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்று, அதன் படி எமது வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பிரசுரம் வெளியிடப்படுகிறது. புனித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது சக்தியுள்ள அனைத்து முஸ்லிம்கள் மீதும் கட்டாயக் கடமையாகும்..

ரமழான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும், தெளிவான சான்றுகளைக் கொண்டதும், (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே, உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும். (அல்குர்ஆன் 2:185)


நோன்பின் நோக்கம்:


‘யார் பொய்யான பேச்சுக்களையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ, அவர் பசித்திருப்பதோ, தாகித்திருப்பதோ அல்லாஹ்வுக்குத் தேவையில்லை என்று நபி () கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா.
‘நோன்பு நோற்றிருக்கும் போது, உங்களிடம் ஒருவர் சண்டைக்கு வந்தால் – அறியாமையாக நடந்து கொண்டால் – ஏசினால் நான் நோன்பாளி எனக் கூறிவிடுங்கள் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, திர்மிதி.


நோன்பினால் கிடைக்கும் மறுமைப் பயன்கள்:


‘ஒவ்வொரு நன்மையான காரியத்திற்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு வரை பரிசு வழங்கப்படுகிறது. ஆனால், நோன்பு எனக்கே உரியது. எனவே, அதற்கு நானே பரிசளிப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி () அவர்கள் கூறுகிறார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.

‘யார் ரமழான் மாதத்தில் நம்பிக்கையுடனும் மறுமைப் பயனை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ, அதற்கு முன் அவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.


ரமழான் மாதத்தை தீர்மானம் செய்தல்:


‘நீங்கள் பிறை பார்த்து நோன்பைத் துவங்குங்கள்! பிறை பார்த்து நோன்பை விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால், ஷஅபான் மாதத்தின் நாட்களை முப்பது நாட்களாக முடிவு செய்து கொள்ளுங்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)


ஸஹருக்கு அறிவிப்புச் செய்தல்:


மக்கள் உறக்கத்திலிருந்து விழித்து ஸஹர் செய்ய வேண்டியுள்ளதால், ஸஹர் செய்வதற்காக மக்களை எழுப்பிவிடக்கூடிய ஏற்பாடு நபி () அவர்களால் செய்யப்பட்டிருந்தது. பிலால் (), அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் () ஆகிய இரண்டு முஅத்தீன்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இருவரது குரலும் மக்களுக்கு நன்கு பரிச்சியமாகி இருந்தது. ரமழான் மாதத்தில் ஸஹருக்கு ஒரு பாங்கும், சுப்ஹ் தொழுகைக்கு ஒரு பாங்கும் என இரண்டு பாங்குகள் சொல்ல நபி () அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

‘பிலாலின் அதான் (பாங்கு) ஸஹர் செய்வதிலிருந்து உங்களைத் தடுக்காது. ஏனெனில், (இரவில்) நின்று வணங்கியவர் இல்லம் திரும்புவதற்காகவும் உறங்குபவர் விழிப்பதற்காகவுமே அதான் (பாங்கு) சொல்வார் என நபிகள் நாயகம் () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (), நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
‘பிலால் இரவில் அதான் (பாங்கு) சொல்வார். இப்னு உம்மி மக்தூம் அதான் (பாங்கு) சொல்லும் வரை நீங்கள் உண்ணுங்கள் பருகுங்கள் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம், நஸயீ.


ஸஹர் உணவு:


‘நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில், ஸஹர் நேர உணவில் பரகத் (புலனுக்குத் தெரியாத மறைமுகமான பேரருள்) உள்ளது என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.
‘நமது நோன்புக்கும் வேதம் கொடுக்கப்பட்ட (யூத, கிறிஸ்த)வர்களின் நோன்புக்கும் வித்தியாசம் ஸஹர் நேரத்தில் உண்பதாகும் என நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ் (), நூல்: முஸ்லிம்.


குளிப்பு கடமையான நிலையில் ஸஹர் செய்யலாமா?


‘ரமழான் மாதத்தில் நபி () அவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக சுப்ஹ் நேரத்தை அடைவார்கள். (அந்த நிலையில்) நோன்பும் நோற்பார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம்,


நிய்யத் வைத்தல்:

நிய்யத் என்பது வாயால் மொழிவதன்று, உள்ளத்தால் எண்ணுவதாகும். நிய்யத் என்ற வார்த்தைக்கு மனதால் எண்ணுதல், தீர்மானம் செய்தல் என்பது பொருளாகும். வாயால் மொழிவது என்ற அர்த்தம் இந்த வார்த்தைக்கு இல்லை. பர்ழான நோன்பு நோற்கக்கூடியவர் முதல் நாள் இரவில் காலை நோன்பிருப்பேன் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.’ ‘நவைத்து ஸவ்மகதின் அன் அதாயி…’ என்று மக்களால் சொல்லப்படும் நிய்யத்து நபி வழியல்ல. எனவே, நோன்பு நோற்கின்றேன் என மனதால் எண்ணிக்கொள்ள வேண்டும்.


நோன்பின் நேரம்:



சுப்ஹ் நேரம் முதல் சூரியன் மறையும் வரை நோன்பின் நேரமாகும். அதாவது, சுப்ஹ் நேரம் துவங்கியது முதல், சூரியன் மறையும் வரை உண்ணாமல், பருகாமல், உடலுறவு கொள்ளாமல் இருந்து நோன்பை முழுமைப்படுத்த வேண்டும்.


உஷ்னத்தைத் தணிக்கலாமா?


‘நபி () அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது, வெப்பத்தின் காரணமாக தமது தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்ததை நான் பார்த்துள்ளேன் என்று நபித்தோழர் ஒருவர் அறிவிக்கிறார்.’ (நூல்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ) எனவே, நோன்பாளி சூட்டை தணிப்பதற்காக குளிக்கலாம், தலையில் நீரை ஊற்றிக் கொள்ளலாம்.


நோன்பில் மறதியாகச் செய்யும் காரியத்திற்கு:


‘ஒரு நோன்பாளி மறதியாக ஏதேனும் சாப்பிட்டுவிட்டால், அல்லது பருகிவிட்டால், அவர் தனது நோன்பை நிறுத்திவிடாமல் பூர்த்தியாக்கட்டும். ஏனெனில், அவருக்கு உணவளித்ததும், அருந்தச் செய்ததும் அல்லாஹ்வேயாகும் என நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, முஸ்லிம். எனவே, நோன்பாளி மறதியாக உண்பதால் நோன்பு முறிந்து விடாது. வேண்டுமென்று யாராவது உண்டால், அல்லது பருகினால் நோன்பு முறிந்து விடும்.


பல்துலக்கலாமா?


‘நபி () அவர்கள் நோன்பு நோற்றிருக்கும் போது எண்ணிச் சொல்ல முடியாத தடவை பல் துலக்கியதை நான் பார்த்துள்ளேன்.’ அறிவிப்பவர்: ஆமிர் (), நூல்: திர்மிதி. எனவே, நோன்புடன் பற்துலக்குவது நோன்பை முறித்துவிடாது.


உணவை ருசி பார்த்தல்:


உணவு சமைப்பவர்கள் சமைக்கும் போது, உணவுப் பொருட்களை ருசி பார்த்து விட்டு அந்த எச்சிலைத் துப்பிவிட வேண்டும்.


உறக்கத்தில் விந்து வெளியேறினால்:


‘நோன்பாளி கட்டியணைப்பது பற்றி ஒரு மனிதர் நபி () அவர்களிடம் கேட்டார். அவருக்கு அனுமதி அளித்தார்கள். மற்றொருவர் வந்து கேட்டபோது, அவருக்கு அனுமதி மறுத்தார்கள். அனுமதி வழங்கப்பட்டவர் முதியவராகவும், அனுமதி மறுக்கப்பட்டவர் இளைஞராகவும் இருந்தனர்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: அபூதாவூத்.
‘தூக்கத்தின்போது, (கனவில்) விந்து வெளிப்பட்டால், நோன்பை விட்டுவிட வேண்டாம் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: அபூதாவூத்) எனவே, நோன்பாளிக்கு உறக்கத்தில் விந்து வெளியேறினால் நோன்பு முறிந்து விடாது. சுயமாக யாராவது வெளியேற்றினால் நோன்பு முறிந்துவிடும்.


சுருமா, வாசனைப் பொருட்கள் பாவிக்கலாமா?


‘சுருமா, பூசிக்கொள்வதால் நோன்பு முறிந்து விடாது.’ (நூல்: புகாரி, திர்மிதி.) (வாசனைப் பொருட்கள், வைத்தியத்திற்காக ஊசி போட்டுக்கொள்ளுதல் போன்றவற்றாலும் நோன்பு முறியாது.)


நோன்பை முறிக்கும் செயல்கள்


உடலுறவு, உண்ணல், பருகல்:


ஒருவர் வேண்டுமென்று உண்பதும், குடிப்பதும், பகல் நேரத்தில் உடலுறவு கொள்வதும் நோன்பை முறிக்கும்.
மூக்குத் துவாரத்தால் நீரை உட்செலுத்தல்:
‘நோன்பாளி வுழூச் செய்யும் போது, மூக்குக்கு அளவுகடந்து தண்ணீர் செலுத்தலாகாது என நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: லகீத் பின் ஸபீரா (), நூல்: அபூதாவூத்.


இரத்தம் குத்தியெடுத்தல்:


‘இரத்தம் குத்தி எடுத்தவரும், எடுக்கப்பட்டவரும் நோன்பை முறித்து விட்டனர் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: ராபிவு பின் கதீஜா (), நூல்: திர்மிதி.
வேண்டுமென்றே வாந்தியெடுத்தல்:
‘எவருக்கு வாந்தி வந்ததோ, அவர் மீது நோன்பு கழா|இல்லை. யார் வேண்டுமென்று வாந்தி எடுத்தாரோ, அவர் நோன்பைக் கழாச் செய்யட்டும்’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: திர்மிதி, அபூதாவூத்.
சிற்றின்பத்தின் மூலம் விந்து வெளிப்படல்:
ஒருவர் கட்டியணைத்தல், முத்தமிடல் போன்ற சிற்றின்பத்தில் ஈடுபடுகின்றார். அதன் மூலம் விந்து வெளிப்படும் எனில், அவரது நோன்பு முறிந்து விடுவதோடு, அவர் அதனை பின்னர் கழாச் செய்ய வேண்டும்.


உடலுறவு கொள்ளல்:


‘ஒரு நோன்பாளி (நோன்பு நோற்றது (ஸஹர்) முதல் மஃரிப் வரையுள்ள நேரத்தில்) உடலுறவு கொண்டால், நோன்பைக் கழாச் செய்வதுடன் குற்றப்பரிகாரமும் (பித்யா) செய்ய வேண்டும். நோன்புடனிருக்கும் போது, உறவு கொண்டால், அவருக்கான குற்றப்பரிகாரம் பின்வருவனவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும்:

• ஓர் அடிமையை விடுதலை செய்தல்.
• தொடராக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றல்.
• 60 ஏழைகளுக்கு உணவளித்தல்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி, முஸ்லிம்.


நோன்பு திறந்தது முதல், ஸஹர் நேரம் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.


நோன்பை விடச் சலுகையுடையோர்


மாதவிடாய் பெண்களும், பிள்ளைப் பேற்று தாய்மார்களும்:


‘மாதவிடாய்ப் பெண்கள் நோன்பு நோற்பது ஹராம். ஒரு பெண் நோன்போடு இருக்கும் போது, நோன்பின் இறுதி சில நிமிடங்களுக்கு முன்னர் என்றாலும் சரி, மாதவிடாய் அல்லது நிபாஸ்|இரத்தம் வருமெனில், அவளது நோன்பு முறிந்து விடும். அவள் அதனைப் பின்னர் கழாச் செய்யவேண்டும்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: புகாரி, முஸ்லிம்.
பிரயாணியும் நோயாளியும்:
‘எவரேனும் நோயாளியாகவோ, பிரயாணியாகவோ இருந்தால், (ரமழானில் பிடிக்காத நோன்புகளை) மற்ற நாட்களை எண்ணி (நோற்று) விடவும்’ (அல்குர்ஆன் 2:184) இவ்வசனம் நோயாளியும், பிரயாணியும் ரமழானில் நோன்பை விட்டு விட்டு, ஏனைய மாதங்களில் பிடிக்க அனுமதியளிக்கிறது.


முதியோர்:


‘ரமழான் காலத்தில் நோன்பை விட்டு விட வயது சென்ற முதியவர்களுக்கும், தீராத நோயாளிகளுக்கும் அனுமதி உண்டு. முதுமை என்பது நீங்கக் கூடியதல்ல. தீராத நோயுடையோரது நிலையும் இதுதான். இப்படியான நிலையில் உள்ளவர்கள் விடும் ஒவ்வொரு நோன்பிற்கும் பரிகாரம் (பித்யா) ஒரு ஏழை வீதம் ஒவ்வொரு நாளும் உணவளிக்க வேண்டும்.’ அறிவிப்பவர்: அனஸ் (), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.
கர்ப்பிணிகளும், பாலூட்டும் தாய்மார்களும்:


‘கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் நபி () அவர்கள் நோன்பில் சலுகை அளித்தார்கள். கர்ப்பத்தில் உள்ள சிசுவும், பால் அருந்தும் குழந்தையும் பாதிக்கப்படலாம் என அஞ்சும் தாய்மார்கள் நோன்பை விட்டு விட்டு, பின்னர் அதை கழாச் செய்யலாம்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத், திர்மிதி.


ஹைளு, நிபாஸ்வுடைய பெண்கள்:


‘நாங்கள் நபி () அவர்களுடன் இருந்த காலத்தில், மாதவிடாய் ஏற்பட்டு, தூய்மையடைவோம். அப்போது, விடுபட்டிருந்த நோன்பைக் கழாச் செய்யுமாறு நபி () அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கழாச் செய்யுமாறு கட்டளையிடமாட்டார்கள்.’ அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா (), நூல்: புகாரி.


சிறுவர்கள்:


‘பருவம் அடையாத சிறுவர்கள் மீது நோன்பு கடமையில்லை. எனினும், அவர்களை பயிற்றுவிப்பதற்காக ஸஹாபாக்கள் நோன்பு நோற்கச் செய்துள்ளனர். அத்தோடு, அவர்கள் பசியை உணராமல் இருப்பதற்காக அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் உள்ளனர்.’ (நூல்: புகாரி) அதனால், அவர்களும் நோன்பு பிடிக்கலாம்.


நோன்பு திறத்தல்:



‘யாருக்கு பேரீச்சம் பழம் கிடைக்கிறதோ, அவர் அதன் மூலம் நோன்பு திறக்கட்டும்! கிடைக்காதவர்கள் தண்ணீர் மூலம் நோன்பு திறக்கட்டும். ஏனெனில், அது தூய்மையானதாகும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (), நூல்: நஸயீ.

‘நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சிகள் உள்ளன. ஒன்று நோன்பு திறக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சியாகும். மற்றொன்று, தனது இறைவனைச் சந்திக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியாகும் என்று நபி () அவர்கள் கூறினார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: புகாரி.


நோன்பு திறப்பதை விரைவு படுத்தல்:


‘நோன்பு திறப்பதை விரைந்து செய்யும் காலமெல்லாம், மக்கள் நன்மையில் உள்ளனர் என்பது நபி () அவர்களின் பொன்மொழி.’ அறிவிப்பவர்: அபூதர் (), நூல்: அஹ்மத்.

நோன்பின் துஆ:
நோன்பு திறக்கும் போது, கூறுவதற்கு ஆதாரபூர்வமான துஆக்கள் இல்லாததால், வழமையாக உணவு உண்ணும் போது, ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது போன்று கூறிக் கொள்ள வேண்டும்.
நோன்பு திறந்த பின்னர் கேட்கப்படும் துஆ அங்கீகரிக்கப்படும் என்பதால், தமிழ் மொழியிலேயே அதிகமதிகம் தமது தேவைகளை அல்லாஹ்விடம் கேட்டுப் பிரார்த்திக்கலாம்.


சுன்னத்தான நோன்புகள்

ஆறு நோன்புகள்:

ரமழான் மாதத்திற்கு அடுத்த ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகள் நோற்பதற்கு நபி () அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.
‘யார் ரமழான் மாதம் நோன்பு நோற்று, அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதம் ஆறுநாட்கள் நோன்பு நோற்கிறாரோ, அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவராவார் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூ அய்யூப் (), நூல்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி.


வியாழன் மற்றும் திங்கள் தோறும் நோன்பு நோற்பது:


‘நபி () அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தார்கள்.’ அறிவிப்பவர்: ஆயிஷா (), நூல்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.
‘ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கட்கிழமைகளில் அமல்கள் (இறைவனிடம்) சமர்பிக்கப்படுகின்றன. எனவே, நான் நோன்பு நோற்றுள்ள நிலையில் எனது அமல்கள் சமர்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி () அவர்கள் கூறியுள்ளார்கள்.’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (), நூல்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா.


அரபா நோன்பு:



துல்ஹஜ் மாதம் பிறை ஒன்பது அன்று ஹாஜிகள் அரபாவில் தங்குவார்கள். அன்றைய தினம் ஹாஜிகள் தவிர்ந்த மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும்.
‘அரபா நாளில் நோன்பு நோற்பது அதற்கு முந்திய வருடம், மற்றும் அடுத்த வருடத்திற்கான பரிகாரமாகும் என நபி () அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)


நோன்பு நோற்கக் கூடாத நாட்கள்:



நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், அதையடுத்த மூன்று நாட்கள் ஆகிய ஐந்து நாட்கள் நோன்பு நோற்பது நபி () அவர்களால் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஷஅபான் முப்பதாம் இரவா? ரமழானின் முதல் இரவா? என்ற சந்தேகம் ஏற்படும் நாளிலும் நோன்பு நோற்பதை நபி () அவர்கள் தடுத்துள்ளார்கள்.
‘நபி () அவர்கள் நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாட்களில் நோன்பு நோற்கத் தடை விதித்தார்கள்.’ அறிவிப்பவர்: அபூஸயீத் (), நூல்: புகாரி, முஸ்லிம்.

‘தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் பிறை 11,12,13) உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் எந்த நோன்பும் கிடையாது என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி () அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ அறிவிப்பவர்: ஸஃது () நூல்: அஹ்மத்.
‘(ரமழானா? ஷவ்வாலா? என்று) சந்தேகம் உள்ள நாளில் யார் நோன்பு நோற்கிறாரோ அவர் நபி () அவர்களுக்கு மாறு செய்து விட்டார்.’ அறிவிப்பவர்: அம்மார் (),
நூல்: புகாரி.

பராஅத் நோன்பு என்றும், மிஹ்ராஜ் நோன்பு என்றும் நோற்கக் கூடிய நோன்புகள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, குர்ஆன் ஹதீஸில் இடம்பெறாத, மக்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொண்ட பித்அத் நோன்புகளாகும். இதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும்.


இரவு வணக்கம் (கியாமுல் லைல்)


புனித ரமழானின் இரவு காலங்களில் நின்று வணங்குவதை நபி () அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள்.

‘ரமழானில் நபி () அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது? என்று அபூ ஸலமா அவர்கள் ஆயிஷா () அவர்களிடம் கேட்டபோது, ரமழானிலும் ரமழான் அல்லாத மாதங்களிலும் நபி () அவர்கள் 11 ரக்ஆத்துக்களுக்கு மேல் தொழுததில்லை என விடையளித்தார்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
‘உபைப் பின் கஅப் () அவர்களையும் தமீமுத்தாரி () அவர்களையும் மக்களுக்கு 11 ரக்ஆத்துக்கள் தொழ வைக்குமாறு உமர் () அவர்கள் கட்டளையிட்டார்கள்.’ (நூல்: முஅத்தா)

எல்லா நாட்களிலும் கியாமுல் லைல் தொழுகையை தொழவேண்டும். எனினும், ரமழான் மாதத்தில் இந்த தொழுகைக்கு அதிக அளவு ஆர்வமூட்டப்பட்டுள்ளது. ‘யார் ரமழானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர் நோக்கியும் தொழுகிறாரோ அவரது முன்பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன.

இத்தொழுகையை ஜமாஅத்தாகவும் தனியாகவும் தொழலாம். 20 10 3 ரக்ஆத்துக்கள் தொழுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை.


லைலத்துல் கத்ர் இரவு
ரமழான் மாதத்தில் மகத்துவமிக்க ஓர் இரவு உள்ளது. ‘இந்தத் திருக்குர்ஆனை மகத்துவமிக்க ஓர் இரவில் நாம் அருளியுள்ளோம். மகத்துவமிக்க இரவைப்பற்றி உமக்குத் தெரியுமா? அந்த மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும்.’ (அல்குர்ஆன் 97:1-3)
இந்த மகத்துவமிக்க இரவு 27ல் தான் என்று குர்ஆனிலோ ஹதீஸிலோ கூறப்படவில்லை. கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்துள்ளது.
‘லைலத்துல் கத்ர் இரவை ரமழானில் கடைசி பத்து நாட்களில் ஒற்றை இரவுகளில் நீங்கள் தேடுங்கள்’ என்பது நபிமொழி. (நூல்: புகாரி)


இஃதிகாப்
கடைசிப் பத்து நாட்களில் நபி () அவர்கள் பள்ளிவாசலிலேயே தங்கியிருக்கும் இஃதிகாப் எனும் வணக்கத்தை செய்துள்ளார்கள். ‘நபி () அவர்கள் ரமழானின் கடைசிப் பத்து நாட்களில், அவர்கள் மரணிக்கும் வரை இஃதிகாப் இருந்தார்கள்.’ (நூல்: புகாரி, முஸ்லிம்)
(அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்)


நன்றி
கடய நல்லூர் அக்ஸா தளத்திலருந்து...

இதைக் கேள்விப்பட்டீர்களா....?

சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?"


வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார். "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?"

அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...."

"நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?"

"அதில்லை..."

"இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?"

"இல்லை"

"இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?"

"அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது.

"ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று

சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்.

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா?

மற்றவர்கள் விஷயங்களையும், அவர்களது பணத்தையும் நம்மில் பெரும்பாலானோர் நம்முடையதைப் போல் பயன்படுத்தத் தவறி விடுகிறோம். ஒருவித அலட்சியம் தானாக வந்து விடுகிறது. அதன் விளைவுகள் நம்மை பாதிப்பதில்லை என்பதும் அவர்களை எந்த அளவில் பாதிக்கிறது என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம் என்பதுமே அதற்கு முக்கியக் காரணம் என்று சொல்லலாம்.

எங்கோ படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு சீடன் மற்றவர்களைப் பற்றி உள்ளதும் இல்லாததுமாய் செய்திகளை மற்றவர்களிடம் சொல்லும் பழக்கம் உடையவானாய் இருந்தான். அதைக் கண்ட குரு அவனைக் கண்டித்தார். அவன் மன்னிப்பு கோரினான். ஆனாலும் அவனுடைய செய்கையின் தீமை அவன் மனதில் ஆழமாய் பதியவில்லை என்பதை அறிந்த குரு அவனிடம் ஒரு சிறு பஞ்சு மூட்டையைத் தந்து நகரத்தின் மையத்தில் உள்ள மைதானம் ஒன்றில் நின்று அதை சிறிது சிறிதாகப் பிய்த்து காற்றில் ஊதிப் பறக்க விட்டு வரும்படி சொன்னார்.

சீடன் வெகு சுலபமாக அதைச் செய்து விட்டு வந்தான். குரு சொன்னார். "சரி இப்போது போய் அதையெல்லாம் ஒன்று விடாமல் சேகரித்துக் கொண்டு வா".

சீடன் திகைத்தான். இதென்ன ஆகிற காரியமா? "குருவே அந்த பஞ்சு காற்றில் இன்னேரம் எங்கெங்கு பறந்து போய் இருக்கிறதோ? அதை எப்படி மறுபடி சேகரித்து வர முடியும்?"

"ஒரு மணி நேரத்திற்கு முன் பறக்க விட்ட பஞ்சுகளை உன்னால் சேகரித்து திரும்பக் கொண்டு வர முடியவில்லை. மற்றவர்களைப் பற்றி என்னென்னவோ சொல்லி வதந்திகளைப் பறக்க விட்டு வந்திருக்கிறாய். அவை யார் யார் வாயில் எப்படியெல்லாம் மீண்டும் திரிந்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கின்றனவோ. நீ மன்னிப்பு கேட்பதன் மூலம் அவற்றைத் திரும்பப் பெற முடியும் என்று நினைக்கிறாயா?"

அப்போது தான் அந்த சீடனுக்குத் தன் செயலின் தீமை முழுவதுமாகப் புரிந்தது. கண்ணீர் மல்க வெட்கித் தலை குனிந்த சீடன் அன்றிலிருந்த அந்தப் பழக்கத்தை அடியோடு விட்டான்.

நம்முடைய தவறான செய்திகள் எத்தனை பேரிடம் சென்று எப்படியெல்லாம் திரிந்து மற்றவர் மனதில் என்னென்ன அபிப்பிராயங்களை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதை நாம் அறிவோமா? விளையாட்டாய் பொழுது போக்காய் அடுத்தவர் பற்றி நாம் முழுவதுமாக அறியாததைப் பற்றி சொல்லும் போது எத்தனை பெரிய பாதகத்தைச் செய்கிறோம் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

சிலர் நாங்கள் உள்ளதைத் தானே சொல்கிறோம், உண்மையைத் தானே சொல்கிறோம் என்று மற்றவரின் பலவீனமான உண்மைகளையும், நல்லதல்லாத உண்மைகளையும் சொல்லக்கூடும். அப்போதும் ஒரு கேள்வியை நம்முள் கேட்டுக் கொள்வது மிகவும் நல்லது. "நம்முடைய எல்லா உண்மைகளையும் நாம் வெளியில் சொல்கிறோமோ? வெளியே நம்மைப் பற்றி தெரிய வேண்டாம் என்று நினைக்கிற தர்மசங்கடமான உண்மைகள் நம் வாழ்வில் இல்லவே இல்லையா?"

நாம் மனிதர்கள். நம்முள் மிக மேன்மையாவர்கள் கூட அந்த மேன்மையை எட்டுவதற்கு முன் எத்தனையோ தவறுகளை செய்து அதிலிருந்து கற்றிருக்கிறார்கள்; எத்தனையோ பலவீனங்களுடன் போராடிய பிறகே வென்றிருக்கிறார்கள். மற்றவர்களைப் பற்றி நாம் சொல்லும் தவறுகளை நாம் செய்யாதிருக்கக்கூடும். ஆனால் மற்ற எத்தனையோ தவறுகள் நாமும் செய்கிறோம். இப்படியிருக்கையில் நாம் அடுத்தவர் பற்றி வம்பு பேசுவது நியாயமா?

இனி யாராவது அடுத்தவர் பற்றி உங்களிடம் நல்லதல்லாதவற்றைச் சொல்ல வந்தால் பெரிய ஆர்வம் காண்பிக்காதீர்கள். சாக்ரடீஸ் போல சொல்ல முடியா விட்டாலும் நீங்கள் ஆர்வம் காண்பிக்காத போது மற்றவர்கள் உங்களிடம் சொல்வதைத் தானாகக் குறைத்துவிடுவார்கள். அதே போல் மற்றவர்களைப் பற்றி நல்லதல்லாதவற்றை நீங்கள் சொல்ல நினைக்கும் போது உதடுகளை இறுக்கிக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் நீங்கள் செய்யும் மிக உத்தமமான காரியம் அதுவாகத் தான் இருக்க முடியும்

நன்றி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்
Related Posts Plugin for WordPress, Blogger...