(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, August 27, 2011

உணவில்லாமல் உயிருக்கு போராடிவரும் நம் சகோதர,சகோதரிகளுக்கு கைகொடுங்கள்.




ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சோமாலியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் சாப்பிட உணவு இன்றி அங்கு வாழ்பவர்களில் பாதி பேர் அதாவது 4 1/2 லட்சம் மக்கள் அவதிப்படுகின்றனர். 5 வயதுக்குட்பட்ட சுமார் 29 ஆயிரம் குழந்தைகள் உணவின்றி உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் எலும்பு கூடுகளாக நடமாடி வருகின்றனர்.



ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படும் சோமாலியாவில் கடும்  தொடர்கிறது. இந்த வருட முடிவு வரை தொடரலாம் என அஞ்சப்படும் இந்த கடும் பஞ்சத்தில் இருந்து சோமாலிய மக்களை காக்க  சபை முயன்று வருகிறது.
(இஸ்லாமிய நாடு என்று சொல்லிகொள்ளும் எந்த நாடும் சோமாலியாவிற்கு உதவிக்கரம் நீட்டுவதில் கவனம் செலுத்தவில்லை என்பது வெக்க கேடான விஷயம். )

எனினும் பஞ்சத்தில் சிக்கிய சோமாலிய மக்களுக்கு, குறிப்பாக பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தேவையான அளவு உணவு மட்டும் நிதி திரட்டுவது இன்னும் முடியாத நிலையில், நிவாரணப் பணிகளை முழு வீச்சில் நடத்துவது சவாலாக உள்ளதாக தெரிகிறது.
பசி ,பட்டினியால் மரணிப்பது கொடுமையான விஷயம். இதன் வீரியத்தை புரிந்துகொண்டு உலக மக்கள் சோமாலிய மக்களுக்கு உதவ முன்வர வேண்டும்.
 "அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது நீ மட்டும் உணவு உண்ணாதே என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம். "
ஆனால் ஒரு நாடே பசியால் வாடிக்கொண்டு இருக்கும் பொது நாம் மட்டும் வயிறு புடைக்க சாப்பிட்டு கொண்டு இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை?..
உலகில் ஒரு மூளையில் பஞ்சம் , மறு மூளையில் எல்லாம் மிச்சம் , வீண் விரையம்...  
ஆகவே உலக இஸ்லாமிய மக்களே உதவுங்கள் , அவர்கள் பசியால் வாடுகிறார்கள் - இந்த மக்களை பாருங்கள் பச்சிளம் குழந்தைகளை பாருங்கள் அவர்கள் முகத்தை பாருங்கள்.. 
யா அல்லாஹ் ! இந்த மக்களின் துயரத்தை நீக்குவாயாக ! இவர்கள் படும் வேதனையை முழுமையாக நீக்குவாயாக ! 
 நீ வழங்கும் இந்த சோதனையை எதிர்கொள்ளும் ஆற்றலை நீ அவர்களுக்கு தருவாயாக! .. இந்த சோதனையில் எங்களை போன்ற உலக முஸ்லிம்களுக்கும் பங்குண்டு.. இவர்களை கொண்டு நீ எங்களையும் சோதிக்கிறாய் ஆதலால் அவர்களின் துயரத்தை துடைக்கும் பாக்கியத்தை எங்களுக்கு நீ தருவாயாக ...! 
அவர்களுக்காக செல்வதை வாரி இறைக்கும் மனதை எங்களுக்கு தருவாயாக ! 
சோமாலியாவை பொருத்தவரை அவர்கள் நிலைமை மிக மோசமாக இருக்கிறது அடிப்படை வசதி கூட இல்லை அவர்களிடம்... ஆனால் அல்லாஹு அக்பர் அவர்களின் ஈமானை அல்லாஹ் பலமாகவே வைத்திருக்கிறான்..


ஒரு சிறு விஷயத்திற்கு நாம் நிராசை அடைந்து விடுவோம் நாம காரு வாங்க , பங்களா வாங்க கஷ்டபடுறோம் ஆனால் அந்த மக்கள் சோறு தண்ணிக்கு கஷ்ட படுறாங்க...  ஆனாலும் அவர்களை பாருங்கள்..
நாம் வெக்கப்பட வேண்டும்..
*


அல்லாஹ் இந்த மக்களுக்கு நற் கிருபை செய்வானாக ! மறுமையில் உயர்ந்த அந்தஸ்தில் இவர்களை வாழசெய்வானாக !



கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள  சோமாலியா நாட்டில்  ஏற்பட்டுள்ள பஞ்சத்தை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபை நன்கொடை திரட்டி வருகிறது.
இதுவரை உலக நாடுகளிடம் இருந்து நிர்ணயிக்கப்பட்ட அளவில் 48 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. வறட்சி நிவாரணப் பணிகளுக்கு மொத்தம் 250 கோடி டொலர் நிதி உதவியை  கேட்டு இருந்தது.
இந்த தொகையில் 120 கோடி டொலர் நன்கொடையாக வசூலிக்கப்பட வேண்டிய நிலையுள்ளது. நன்கொடை நாடுகளிடம் இந்த தொகையை பெற ஐ.நா நம்பிக்கை இழந்த நிலையிலும் முயற்சியை மேற்கொண்டுள்ளது.
சோமாலியாவுக்கான ஐ.நா ஒருங்கிணைப்பாளர் மார்க் போடன் கூறுகையில்,”சோமாலியாவில் 30 லட்சம் மக்கள் மிகுந்த துயரமான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு உடனடி  தேவைப்படுகிறது. 100 கோடி டொலருக்கு மேல் நன்கொடை திரட்ட வேண்டி உள்ளது” என்றார்.
 தலைநகர் மொகாதிஷீவுக்கு கப்பல் மற்றும் விமானம் மூலமாக நிவாரண உதவிகள் வருகின்றன. ஆனால் அந்த உணவுப்பொருட்கள், மருந்துகள் மிகவும் குறைவாகவே உள்ளன என்று மேலும் தெரிவித்தார்.
சோமாலியாவில் குழந்தைகளுக்காக செயல்படும் பெரிய மருத்துவ பிரிவு கொண்ட பனாதிர் மருத்துவமனையில் மின்வசதி, தண்ணீர் வசதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.





அவர்கள் அல்லாஹ்விடம் கையேந்துகிறார்கள்...
அவர்கள் கைகளில் ஒன்றுமில்லை...

நம்முடைய செல்வ கைகளை கொண்டு அல்லாஹ் அந்த மக்களுக்கு உதவி புரிய நாடுகிறான் இன்ஷாஅல்லாஹ் நாம் நம்மால் முடிந்த அளவிற்கு நம்முடைய பங்களிப்பை வழங்குவோம்... மேலும் நமக்காக அல்லாஹ்விடம் கையேந்தும் ஒவ்வொரு முறையும் இந்த சோமாலிய மக்களுக்காகவும் நாம் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்...


திருக்குர்ஆன் கூறுகிறது:
”அல்லாஹ் தான் உங்களைப் படைத்தவன், அவனே உணவு வழங்குகிறான்”(அல்குர்ஆன் 30:40).
“(இவையன்றி) நீங்கள் அவனிடம் கேட்ட யாவற்றிலிருந்தும் அவன் உங்களுக்குக் கொடுத்தான்; அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணிப்பீர்களாயின் அவற்றை நீங்கள் எண்ணி முடியாது! நிச்சயமாக மனிதன் மிக்க அநியாயக்காரனாகவும், மிக்க நன்றி கெட்டவனாகவும் இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 14:34)
”…பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்.”(அல்குர்ஆன் 2:36)
”…உங்களிலுள்ள செல்வந்தர்களுக்குள்ளேயே (செல்வம்) சுற்றிக் கொண்டிருக்காமல் இருப்பதற்காக (இவ்வாறு பங்கிட்டுக் கொடுக்கக் கட்டளையிடப் பட்டுள்ளது…”(அல்குர்ஆன் 59:7)

http://www.unicef.org.uk/landing-pages/hornofafricaweb/

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...