(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 10, 2014

ஆத்தா கட்சிக்கு ஆதரவு ஏன் ? TNTJ விளக்கமும், நம் ஆதங்கமும்.

சகோதர ,சகோதரிகளுக்கு .... அஸ்ஸலாமு அழைக்கும்....

JAN 28 க்கு முன்பும் , பின்பும் TNTJவின் நிலைப்பாடு : 
தமிழக அரசு இட ஒதுக்கீடு உயர்த்தி கொடுத்தால் தான் ஆதரவு மற்றபடி எந்த வாக்குறுதி என்ன சொன்னாலும் அரசுக்கு எதிரான முடிவு தான் தேர்தலில் எடுப்போம் என்பது தான்.

ஆனால் தேர்தல் விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்தாகிவிட்டது இடஒதுக்கீடு அறிவிப்பும் இல்லை. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி பத்திரிக்கை செய்தி வெளிவந்தது. இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க பரிந்துரை – பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம் என்ற செய்தி ..          

இது வெறும் கண்துடைப்பு இப்ப என்ன பரிந்துரை வேண்டி இருக்கு என்று எல்லோரும் பேசி கொண்டோம். அதை பொருட்டாக கருதவில்லை TNTJ அமைப்பினர்கள் கூட விமர்சித்தார்கள்  இந்நிலையில் TNTJ எதிரான முடிவை முன்வைக்கும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு கடந்த மார்ச் 8ம் தேதி அன்று அதிமுகவிற்கு ஆதரவு என்று TNTJ தலைமை அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எந்த அடிப்படையில் ஆதரவு ? என்று பலரும் விமர்சித்தார்கள். நாமும் கடுமையாக விமர்சித்தோம்.  இவ்வாறான விமர்சனங்கள் எழுவது இயல்பு ஏனெனில் TNTJ அணுகுமுறை அப்படி தான் இருந்தது..

TNTJ வை விமர்சிப்பதேயே முழுநேர பணியாக செய்பவர்களை பற்றி நாம் இங்கு சொல்ல தேவையில்லை பிரித்து மேய்ந்து விட்டார்கள்.( TNTJ அமைப்பினரும் சளைத்தவர்கள் அல்ல, விமர்சிப்பதற்கு பேர்போனவர்கள் என்பது வேறு விஷயம்)

ஆனால் நம்முடைய விமர்சனம் அப்படி அல்ல , எதார்த்தமானது  ஒரு சாமானியனுக்கு எழும் விமர்சனமே இன்னும் சொல்லபோனால், சரியாக இருந்தால் அதை பாராட்டுவதும்,ஆதரிப்பதும்... தவறாக ,பிழையாக இருந்தால் அதை விமர்சிப்பதும் , சுட்டிகாட்டுவதும் நடுநிலையான சமூக பார்வை உள்ளவர்களின் நிலைப்பாடு...

ஆனால் இந்த நடுநிலையானவர்களை கூட நடுநிலை வியாதி என்று விமர்சிப்பவர்கள் தான் நம் TNTJவினர் ... ( உலகத்தில் எவனுமே எஹல குறை சொல்லிட கூடாது , ஆனா உலகத்தில் உள்ள அனைத்தையும் பத்தி குறை சொல்லுவாஹா )

சரி அது இருக்கட்டும் .. விசயத்திற்கு வருவோம்.. நம்முடைய விமர்சனம் மட்டுமல்லாது குறிப்பாக தமுமுக வினர் வைத்த விமர்சனங்களை ஒன்று விடாமல் சேகரித்து பி.ஜெ நீண்ட விளக்கத்தை கொடுத்துள்ளார்.   
அதன் லிங் கீழே இருக்கிறது.


அனைத்து வீடியோவையும் முழுவதுமாக பார்த்த ( 5 – பாகம் ) பிறகே விமர்சனத்தை  இங்கே பதிவு செய்கிறோம் : சக்களத்தி (தமுமுக) சண்டைக்கு அவர் கொடுக்கும் கவுன்ட்டர் நமக்கு தேவையில்லை.     அது கன்னித்தீவு போல் காலம் காலமாக இருந்து கொண்டே இருக்கும். 

மக்களின் பிரதான கேள்வி இடஒதுக்கீடு உயர்த்திதராத நிலையில் அதிமுகவிற்கு உங்கள் ஆதரவு ஏன் ? இதற்க்கு அவர் சொல்லும் காரணம்  :

இட ஒதுக்கீட்டை 3.5% மேல் உயர்த்தி தருவதற்கு பிற்படுத்தபட்டோர் ஆணையம் பரிந்துரைத்த பிறகு அரசு நமக்கு வழங்கினால் தான் அதில் சட்டசிக்கல் வராது யாரும் வழக்கு போட்டு இடஒதுக்கீட்டிற்கு தடை வாங்க முடியாது இதை பல சட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து , ஆராய்ந்து முடிவு எடுத்துள்ளோம். அதிமுக அமைச்சர்களிடம் இடஒதுக்கீட்டை உயர்த்திதர வேண்டும் என்று கடிதம் கொடுத்தோம் ஆனால் ஆணையம் அமைப்பது தான் சிறந்தது என்பதனால் பிறகு நாங்கள் தான் ஆணையம் அமையுங்கள் அதன் பரிந்துரையின் பெயரில் இடஒதுக்கீட்டை உயர்த்தி தாருங்கள் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தோம் அதன் படி ஆணையம் அமைக்கப்பட்டது எனவே நாங்கள் ஆதரிக்கிறோம் என்கிறார். மேலும் இந்த முடிவை பிப்ரவரி 23 தேதி நடந்த பொதுகுழுவிலேயே எடுத்துவிட்டதாக ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார் ஓகே. 

நமது விமர்சனம் :  மேற்கண்ட விளக்கத்தை அல்லாஹ்விற்கு பயந்து நடுநிலையாக ஆராயிந்து பார்த்ததில் அவர் சொல்வது , நடந்தது உண்மையென்றால் அவரின் விளக்கம் ஏற்றுகொள்ள கூடியது தான்,       “ நேரடியாக இடஒதுக்கீடு கொடுத்து விடுவது தற்காலிக பயன்தான் அதற்க்கு தடை உத்தரவு வாங்கிவிட முடியும் ஆதலால் நாங்கள் கமிஷன் அமைக்க சொன்னோம் அதன் படி நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிறார்“  ஆனால் அதே சமயம் அவரின் இந்த விளக்கம்  பல விமர்சனங்களுக்கும் உட்பட்டது ஏனெனில்,

1 . இடஒதுக்கீடு என்றால் என்ன ?
2. அது ஏன் நமக்கு தேவை ?
3. அது நமக்கு கொடுக்கபட்டால் என்னவகையான மாற்றம் நிகழும் .
4. அது முறைப்படி எத்தனை சதவீதம் நமக்கு தரப்பட வேண்டும் .
5. சச்சார் கமிசன் என்று ஒன்று உள்ளது. அது நம் சமூகத்திற்கு இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்துள்ளது.

ஆகிய அனைத்தையும் நமக்கு பல வருடமாக பாடம் சொல்லிகொடுத்தவருக்கு
இட ஒதுக்கீட்டை 3.5% மேல் உயர்த்தி தருவதற்கு பிற்படுத்தபட்டோர் ஆணையம் பரிந்துரைத்த பிறகு அரசு நமக்கு வழங்கினால் தான் அதில் சட்டசிக்கல் வராது, யாரும் வழக்கு போட்டு இடஒதுக்கீட்டிற்கு தடை வாங்க முடியாது என்ற விஷயம் இவ்வளவு நாட்களாக எப்படி தெரியாமல் போனது ???

இட ஒதுக்கீட்டை பற்றி பக்கம் பக்கமாக விளக்கம் அளிக்கும்போது ஜனவரி 28க்கு முன்பாக இவ்விஷயம் தெரியாமல் போனது எப்படி , அது வரை எந்த சட்டநிபுனரும் சொல்லாமல் இருந்தது எப்படி என்பது தலையாய கேள்வி...

சரி இதையும் உடன்பாட்டு அணுகுமுறையில் அணுகி  எல்லோருக்கும் எல்லா விசயங்களும் தெரியவாய்ப்பில்லை .. மறதி , கவனக்குறைவு , புரிந்துணர்வு இல்லாமை ஆகியவைற்றின் அடிப்படையில் தெரியாமல் இருந்திருக்கலாம் ஓகே.

அடுத்து  உங்கள் வாதப்படி பிப்ரவரி 23 தேதி நடந்த பொதுகுழுவிலேயே நீங்கள் இந்த ஆணையை பற்றி அறிந்துவைத்துள்ளீர்கள். ஆணை அமைத்தால் அதன் பிறகு ஆதரவு என்பதையும் வெளிப்படையாக தெரிவித்துவிட்டீர்கள்.

அதன்படி பத்திரிக்கையில் மார்ச் 2ம் தேதி அரசு ஆணையம் அமைக்கப்பட்ட செய்தி வந்ததும். நீங்கள் அதிமுக அமைச்சர்கள் மூலம் ஆதரவு தருகிறோம் என்று கூறிவிட்டீர்கள். ஆனால் நேரில் செல்லவில்லை ஒரு வாரம் களித்து தான் சென்று பார்த்துள்ளீர்கள்.

இது விசயமாக நாம் மக்களிடம் சொன்னது ஒன்று ,ஆனால் நடந்தது ஒன்று நாம் வேறு முடிவு எடுக்க வேண்டி ஆகிவிட்டது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

அப்படியிருக்கும் போது ஜெவை பார்க்க போகும் முன்பாகவே இணையத்திலும் , முகநூலிலும் நாங்கள் முன்பு இப்படி சொன்னோம் , ஆனால் இப்படி தான் சூழ்நிலை அதனால் இப்படி முடிவு செய்வது தான் நல்லது என்று தெளிவுபடுத்தியிருக்கலாமே !
(அதெல்லம் உங்களிடம் ஒவ்வொன்றையும் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறீர்களா )

அவ்வாறு தெளிவுபடுத்தியிருந்தால் மற்றவர்கள் தவறான எண்ணம் கொள்ள முகாந்திரம் இருக்காது. (வழக்கமாக உங்களை விமர்சிப்பவர்கள் அதை செய்துகொண்டு தான் இருப்பார்கள்.) எங்களை போன்ற நடுநிலை வியாதிகள் (உங்கள் பாஷையில்) யார் சொல்வது என்பதைவிட என்ன சொல்லபடுகிறது என்பதை பார்க்ககூடியவர்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் பாழ்படுத்திவிட்டீர்கள் என்றே சொல்லவேண்டும்.

மேலும் நீங்களே ஜன 28க்கு வந்த மக்கள் அனைவரும் TNTJ மட்டும் அல்ல மற்றவர்களும் எங்களை நம்பி வந்தார்கள் என்று சொல்கிறீர்கள் அப்படியிருக்கும் போது பொதுகுழுவிற்கு வந்த 4000 உறுப்பினர்கள் ஏகமனதாக ஆணை பிறப்பித்து தான் இடஒதுக்கீடு உயர்த்த வேண்டும் சொன்னார்களே அதை உங்களை நம்பி வந்த மக்களும் பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டியது தானே .. ஏன் செய்யவில்லை.

ஏன் உங்களை தேவைற்ற விமர்சனங்களுக்கு உள்ளாக்கி மேலும் பித்னாக்கள் அதிகரிக்க வாய்ப்பை வழங்குகிறீர்கள்.. இப்படி செய்தால் TNTJ பொட்டி வங்கிவிட்டது என்று ஏன் சொல்லமாட்டங்க...
இந்த கமிஷன் போட்டு தான் இடஒதுக்கீடு உயர்த்தமுடியும் என்பது முன்பே தெரிந்திருந்தால் ஜன 28 அவசியமாகியிருக்காதே..? இத்தனை மனித உழைப்புகளுக்கு அவசியம் ஏற்பட்டு இருக்காதே..

அவ்வளவு ஏன் ஏழரை லட்சம் உறுப்பினரை கொண்ட அமைப்பு என்று ஜெயலலிதாவே அறிவித்தவர் தானே  அவரிடம் நேரடியாகவோ , அல்லது அமைச்சர்கள் மூலமாகவோ கோரிக்கை வைக்கலாமே , போராட்டம் நடத்திதான் கோரிக்கை வைக்க வேண்டும் என்று ஜெ சொன்னாரா ...  அல்லது உங்கள் நிகழ்கால மக்கள் பலத்தை நீங்கள் பரிசோதனை செய்து கொள்ள இதுபோன்ற போரட்டங்களை நடத்துகிறீர்களா என்பதை படைத்த அல்லாஹ்விற்கு தான் தெரியும்.


எது எப்படியோ நாம் தேர்தல் முடிவுகளை மாற்றும் சக்தி என்பதெல்லம் சுத்த வேஸ்ட்,முஸ்லிம்களின் வாக்குகள் நாலாபுறமும் சிதறிதான் கிடக்கிறது...

தமிழ்நாட்டில் சுமார் 40லட்சம் முஸ்லிம்கள் இருப்பார்களா: 
இதுல ஒட்டு போட தகுதியானவர்கள் 30 லட்சம் இருப்பார்களா.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அமைப்புகள் 30க்கும் மேலாக இருக்கிறது - ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சிக்கு ஆதரவு.
இதில் முஸ்லிம் அரசியல் அமைப்புகள் தனி.
இது போக மற்ற அரசியல் கட்சியில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் தனி
,
இதுல ஓட்டே போட மாட்டேன் என்ற முஸ்லிம்கள் தனி ,
வெளிநாட்டில் இருப்பவர்கள் தனி ,
வோட்டர் லிஸ்டில் பேர் இல்லாதவர்கள் தனி ,
வோட்டு போட்டும் செல்லா வோட்டாக ஆகுவோர் தனி ...
எல்லாமே தனித்தனி ...
பிஜேபிக்கு செம CHANCE இந்த தேர்தலில்...!!


தமிழ்நாட்டிற்கு                    :     திமுக – அதிமுக.
தமிழ் முஸ்லிம்களுக்கு          :     தமுமுக – த.த.ஜ.


தமுமுக – 
        மார்க்கம் மார்க்கம் என்றால் சரிவராது . அரசியல் பண்ணுவோம்.
        ஆனா மார்க்கம் பேசுவோம்.

த.த.ஜ. – 
       அரசியல், பதவி என்றால் சரிவராது . மார்க்கம் பேணுவோம்.
       ஆனா அரசியல் பேசுவோம்.

நடத்துங்க நடத்துங்க...  


யா அல்லாஹ் , நாங்கள் நேர்வழிக்கு வந்தபிறகு எங்களை வழிதவற செய்துவிடாதே ..
உலக முஸ்லிம்களுக்கு ஓர் நல்ல தலைமையை ஏற்படுத்துவாயாக ..
ஈமானோடு மரணிக்க செய்வாயாக..
படைத்தவன் நீயே எங்களுக்கு போதுமானவன்.
எங்களை என்றும் நேர்வழியில் நடத்துவாயாக...

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...