(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

மாற்றுமத சகோதர்களுக்கு


அன்பு சகோதர/சகோதரிகளுக்கு, 

உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுதாக...

 இந்த கடிதத்தை படிக்க சில நிமிடங்கள் செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கைக்கான தேடல் புதிய திசையை நோக்கி பயணப்படலாம். திறந்த மனதோடு சிந்திக்கக்கூடிய, பாரபட்சம் காட்டாத உண்மையை அறிய விரும்பும் சகோதரர்/சகோதரி நீங்கள் என்று நாங்கள் நம்புகின்றோம். மேலும் தொடர்வதற்கு முன்னால், இந்த கடிதத்தின் நோக்கம் என்னவென்று சொல்ல விரும்புகின்றோம். இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறி குறித்த சுருக்கமான அறிமுகமே இந்த கடிதம். 

இஸ்லாம் என்றால் என்ன?  

இஸ்லாம் என்றால் இறைவனுக்கு முற்றிலுமாக அடிபணிவது/அர்ப்பணிப்பது என்று அர்த்தம். எவர் ஒருவர் அப்படி செய்கின்றாரோ அவர் முஸ்லிம் என அழைக்கப்படுகின்றார். உலகின் முதல் மனிதரான ஆதம் (அலை) தொடங்கி, மூசா (Moses) (அலை), ஈசா (Jesus) (அலை), முஹம்மது (ஸல்) என்று இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களுக்கும் கொடுக்கப்பட்டதும், அவர்களால் மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டதும் இஸ்லாம் தான்.  

இஸ்லாம் கூறும் செய்தி: 

இஸ்லாம் கூறும் செய்தி மிக எளிமையானது. இறைவன் ஒருவனே, அவனுக்கு இணை யாருமில்லை, அவனை மட்டுமே வழிபடுங்கள் என்பது தான் அது. 

நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் தேவையற்றவன். அவன் பெறவுமில்லை, பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவருமில்லை --- குரான் (112:1-4)

அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!


அல்லாஹ்வுக்கு உள்ள பண்புகளும், தன்மைகளும்!

அல்லாஹ் என்பவன் அனைத்து படைப்பினங்களின் அரசனாக இருக்கிறான் மேலும் படைத்தல், காத்தல், நிர்வகித்தல், அழித்தல் ஆகிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் பெற்றுள்ளான். எந்த பொருளையும் முன்மாதிரியின்றி படைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளது மேலும் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் தான் நாடியவாறு அந்த பொருள் ஆகிவிடும். இதைப்பற்றி அருள்மறை குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது!

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் ‘குன்‘ – ஆகுக – என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)

அல்லாஹ்வை நம்புங்கள்

நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், ‘மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்‘ என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன் 2:55)
படைத்தவனை மட்டுமே வணங்குங்கள், அவனால் படைக்கப்பட்டவையை வணங்காதீர்கள் என்பது தான் இஸ்லாம் உலக மக்களுக்கு கூறும் செய்தி. 

குர் ஆன்: 

இறைவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தூதரும் அற்புதங்களோடு அனுப்பப்பட்டார்கள். இறுதித் தூதரான முஹம்மது (ஸல்) அவர்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட அற்புதம் குரான். 

குரான் இருபத்தி மூன்று ஆண்டு கால இடைவெளியில் சிறுகச் சிறுக இறைவனால் இறுதித் தூதருக்கு அருளப்பட்டது. 

எப்படிப்பட்ட வேதம் குர்ஆன்?

இன்னும், நம் அடியாருக்கு அருளியுள்ளதில் நீங்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பீர்களானால், உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால், அல்லாஹ்வைத் தவிர உங்கள் உதவியாளர்களை அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள் --- குர்ஆன் (2:23).

இது மனித குலத்திற்கு இறைவனால் விடப்பட்ட சவால். அன்றிலிருந்து இன்று வரை இந்த சவாலுக்கு நெருக்கத்தில் கூட யாராலும் வரமுடியவில்லை. அதன் விளைவாக, இது மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட வேதமென்று கோடானு கோடி மக்கள் தொடர்ந்து நம்பி வருகின்றார்கள். 

இந்த வேதம் அன்று இருந்த சிந்தனையாளர்களுக்கும் சரி, இன்று இருக்க கூடிய சிந்தனையாளர்களுக்கும் சரி தொடர்ந்து ஆச்சர்யத்தை தந்து வருகின்றது. 

மருத்துவ துறையில் மதிப்புமிக்க இடத்தை பெற்றுள்ள டாக்டர் கீத்மூர் (Dr.Keith Moore), தன்னுடைய "The Developing Human" புத்தகத்தில் குரானின் அறிவியல் உண்மைகள் குறித்து ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கின்றார். 

பிரான்சின் மதிப்புமிக்க மருத்துவரான டாக்டர் மவ்ரீஸ் புகேய்ல் (Dr.Maurice Bucaille) அவர்கள் தன்னுடைய "The Bible, the Qur'an and Science" புத்தகத்தில்,

"ஒரு பிழையை கூட குர்ஆனில் நான் காணவில்லை. இந்த புத்தகம் ஒரு மனிதனால் எழுதப்பட்டிருந்தால், எப்படி நவீன அறிவியல் கண்டுபிடித்திருக்க கூடிய உண்மைகளை அன்றே சொல்லி இருக்க முடியும்?"

தன்னை படிப்பவர்களை உரையாடலுக்கு உட்படுத்தி அவர்களுடன் ஒரு அறிவார்ந்த விவாதத்தை ஏற்படுத்தும் குரான் என்னும் அற்புதத்தின் தமிழ் அர்த்தங்களை படிக்க விரும்பும் சகோதர/சகோதரிகள் http://www.otrumai.com/TamilQuran/TamilQuran.chm இந்த லிங்கை கிளிக் செய்து 
பெற்றுகொள்ளலாம் .


நவீன அறிவியல் திருக்குரானில் :
திருக்குரான் என்பது இறைவனின் வார்த்தைகளாகும் ,திருக்குரான் அறிவியல் புத்தகம் இல்லை ஆனால் அறிவியல் பற்றி இஸ்லாம் பேசுகிறது நிரூபிக்கப்பட்ட எந்த அறிவியலோடு எந்தவிதத்திலும் முரண்படவில்லை மேலும் இது இறைவனின் வார்த்தை என்பதற்கு இது சான்றுபகர்கிறது. திருக்குரான் 1400 வருடங்களுக்கு முன்பு இறைவனால் வழங்கப்பட்டது அப்போது நாம் இன்று பார்க்கும் எந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களும் இல்லை என்பதை நினைவில் வைத்து சிந்தியிங்கள்.


1. (BIG BANG : UNIVERSE ) : 21:30

நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள்(non-muslims) பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?


2.(SKIN -pain receptors)


QURAN 4:56 யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

3.(Invisible Barrier at Sea)



25:53 அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்.; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.


4.(விந்தின் பிறப்பிடம் )86:7 
முதுகந்தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து அது வெளியாகிறது.......


5.(கலப்பு விந்து -கருவளர்ச்சி) (76:2)

(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத்துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக, அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம். 23:14

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.


சிலதை  இதில் குறிப்பிட்டுள்ளோம். நீங்கள் குரானை படிக்கும்  பொது பல அறிவியல் செய்திகளை நீங்கள் காணமுடியும்   

சகோதரத்துவம்: 

ஆதாம், ஏவாள் (இருவர் மீதும் இறைவனின் சாந்தி நிலவுவதாக) ஆகிய இருவரிலிருந்தே நாம் அனைவரும் வந்ததால் இவ்வுலகில் உள்ள அனைவருமே சகோதர/சகோதரிகள் என்று கூறுகின்றது இஸ்லாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தி கூறிய விசயங்களில் சகோதரத்துவமும் ஒன்று. தன்னுடைய இறுதி பேருரையில் பின்வருமாறு தெரிவிக்கின்றார்கள் இறுதி தூதர் (ஸல்) அவர்கள்,  

"எல்லா மனிதர்களும் ஆதாம், ஏவாள்லிருந்தே வந்தனர். ஒரு அரபி, அரபி அல்லாதவரை காட்டிலும் உயர்ந்தவரல்ல. அதுபோலவே ஒரு அரபி அல்லாதவர், அரபியரை விட உயர்ந்தவரல்ல. மேலும், வெள்ளையர் கருப்பரை விடவோ அல்லது கறுப்பர் வெள்ளையரை விடவோ உயர்ந்தவரல்ல"

இஸ்லாமை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்று யாருமில்லை. எவர் ஒருவர் இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்கின்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது.
"மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு பின்னர், உங்களை கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; உங்களில் எவர் மிகவும் பய பக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், தெரிந்தவன்" --- குரான் 49:13

அல்லாஹ் நம்மை சோதிப்பான் ஆனால் உதவுவான் (அவன் மாபெரும் கருணையாளன்)

அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுப்பான் அந்த குறைபாடுகளை பார்க்கும் நாம் ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறான்!
  • கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித் தருகிறான்! இதை விட சிறந்த உதவியாக கண்பார்வை யற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெற வைக்கிறான்! மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே!
  • காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • வாய்பேச முடியாத ஊமைகளால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாத காரணத்தினால் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டு பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதே!  மேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும்!  மேலும் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!

புரட்சி:

நாம் பல புரட்சிகளை பற்றி கேள்விபட்டிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் விட இஸ்லாம் செய்த புரட்சி மகத்தானது. மற்ற புரட்சிகளில் மக்களின் புறம் சார்ந்த சூழ்நிலைகள் மாறியிருக்கலாம். ஆனால் இஸ்லாமிய புரட்சியில் மக்களின் அகம், புறம் என இரண்டுமே மாற்றம் கண்டன. அவர்கள் உண்ணும் உணவிலிருந்து, உடுத்தும் உடையிலிருந்து, மற்றவரை அணுகும் முறையிலிருந்து, சகோதரத்துவத்தின் அருமையை உணர்ந்து கொண்டதிலிருந்து என்று மாபெரும் எழுச்சியை இருபத்தி மூன்றே ஆண்டுகளில் செய்து காட்டினார் இறைத் தூதர் (ஸல்) அவர்கள்.

நல்ல விஷயங்களை நோக்கி பயணிக்க ஆசைப்படும் தங்களுக்குள்ளும் (இறைவன் நாடினால்) அந்த புரட்சி ஏற்படலாம். அதற்கு தாங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு முறை குரானை திறந்த மனதோடு முழுமையாக படிக்க முன்வருவது தான். ஆம், குரானுடன் நீங்கள் புரியப்போகும் விவாதம் உங்கள் வாழ்க்கையை மாற்றலாம், உங்களை உங்களுக்கே அடையாம் காட்டலாம்.


விக்ரஹ ஆராதனையை தவிர்த்திடுங்கள்

நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக் கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்” என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். (அல்குர்ஆன்: 7:138)

உலக மக்கள் அனைவரும் பொதுவான விஷயத்துக்கு வாருங்கள்

(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்” எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன்3:64)


உங்களுடைய நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி. விரைவில் உண்மையை கண்டறிய இறைவன் உங்களுக்கு உதவுவானாக...ஆமீன். 


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியையும் அமைதியையும் எல்லாம் வல்ல இறைவன் தந்தருள்வானாக...ஆமீன்..


குறிப்பு

பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கருத்துக்களும் இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்தன! நம் அனைவருக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கி நேர்வழிகாட்டி நல்லருள்புரிந்து!
நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை வழங்கிவன் அல்லாஹ்தான்  எனவே புகழனைத்தும் அவனுக்கே உரியது நாம் அவனுடைய அடிமைகள்தான்!

அல்ஹம்துலில்லாஹ்









ஜசக்கல்லாஹ் : 

ஆஷிக் அஹ்மத் அ ,http://ethirkkural.com

SAMARASAM MAGAZINE
Related Posts Plugin for WordPress, Blogger...